45 திபதை-1 கௌளிபந்து ராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. சோதி நெடுந் தேர்மிதிலை வீதியினில் வரக் கண்டு சுவாமி முகம் காணவந்தார் வெகுமாதர் பூதலந் தனில் இந்தவூர் மாதவம் என் செய்ததோ புண்ணியவன் வந்தான் என்றார் வெகுமாதர் 2. ஆடகலோகத்தமுதை ஈக்கள் மொய்த்துக் கொண்டதைப்போல் ஐயனை மொய்த்துக் கொண்டார் வெகுமாதர் கோடைதனிலே தண்ணீர் ஓடைகண்ட மான்கள் போலக் கூடிக் கொண்டோடி வந்தார் வெகுமாதர் 3. ஆழியும் வளையும் செம்பொன் ஓலையும் மாலையும் விட்டபின் ஆடை விடாமல் நின்றாள் ஒருமாது கேள்வி முறை யில்லையோ சுவாமிஉன் முன்னே அம்பாலே கிழிக்கின்றான் மாரன் என்றாள் ஒருமாது 4. பெருத்த மலைபோல் வில்லை ஒடித்தாயே சீதைக்காக பெலத்தவன் நீயே என்றாள் ஒருமாது வருத்தமோ மாரன் கையில் கருப்பு வில்லை ஒடிக்க மாட்டாயோ சுவாமி என்றாள் ஒருமாது 5. கண்ணுக்கோர் உருவாய்ப் பார்ப்போர் கண்ணிலெல்லாம்தோன்றுமிவன் கண்ணனே யாகுமென்றாள் ஒருமாது மண்ணும் விண்ணும் கடந்தானை கண்ணால் வளைத்துக்கொண்டாளே வைதேகியே பெண்ணே என்றாள் ஒருமாது 6. சாய்த்தொருவரையும் காணாள் சாமிதனையே கண்டாள் தனியனோ ராமன் என்றாள் ஒருமாது வார்த்தையும் உடைமைகளும் பூந்துகிலும் சோர்ந்தாளுயிர் மாத்திரம் சோராமல் நின்றாள் ஒருமாது 7. இங்கேயென் உளம் புகுந்தால் கண் கதவினாலே மூடி இறுக்குவேன் இவனை என்றாள் மங்கையரே என் மனது வள்ளல் பின்னே போ வரக் கண்ட துண்டோ என்றாள் |