பக்கம் எண் :

46

8.    தன்மருக னாகஇந்த மன்னனைப் பெற்ற சனகன்
          தர்மவான் என்று சொன்னாள்               ஒருமாது
     கன்மனதுக் காரனிவன் தன்மகளுக்காகவில்லை
          ஏன்வளைக்கச் சொன்னான் என்றாள்         ஒருமாது

------

சீதை சபாமண்டபத்துக்கு வருதல்

விருத்தம்-18

    பாவையர்இப் படியுருகப் பவனி வந்தான்
         படையரசர் தசரதனும் பலரும் வந்தார்
    மாவிசுவா மித்திரனுடன் தம்பி மாரும்
         மருங்கிருக்க ராகவனும் இருந்தான் இப்பால்
    தாவுபுகழ் வதிஷ்டமுனி வார்த்தை கொண்ட
         சனகன்உரை கொண்டுமணி மண்ட பத்தில்
    பூவுலகில் தேவர்சிறை மீட்க வந்த
         பொருளினால் சீதையெழுந் தருளி னாளே

தரு-16 

சாவேரிராகம்                             ஆதிதாளம்

பல்லவி

     அன்னை சானகி வந்தாளே - ராசாதிராசர்
     அனைவர்க்கும் காட்சி தந்தாளே                 (அன்)

அநுபல்லவி

     கன்னிமார் என்னும்தாரா கணத்தில் சந்திரனை நேரா
     பொன்னின் ஒளியும் பூமணமும் கொண்டு தொடர்ந்து
     மன்னன் சனகமணி மண்டபத்தில் நடந்து          (அன்)
    

சரணங்கள்

1.    சுந்தரப் பாதம்        வைக்கவே      ரத்தினச்சிலம்பின்
          சோதிநிலத்தில்   மொய்க்கவே    பூமியாகிய
     தந்தாய் மகளுக்       கென்னவே      விரித்ததேமாந்
          தளிர்போல எங்கும் மின்னவே        
     அந்த அமிர்தங் கொண்ட            இந்திரன் போலே தாகம்
          ஆகிய ராமர் முன்னே          தோகையர் நடுவாக