47 கந்தமலர்க் கைவளைச் சோதியினாலே ரண்டு கடைக் கண்கள் கொண்டு ராமன் வடிப்பங்கள் கண்டு கொண்டு (அன்) 2. வீரராமன் கை தீண்டியே இடும்போதவன் மென்கை பிடிக்க வேண்டியே அம்மன்கையான வாரீச மலர் விரித்துக் காட்டும் சூரியன் போல் மாணிக்கக் கங்கணம் தரித்து சோர நடைகண்டு நேராகாமல் மெத்த துவளும் அன்னங்கள் போலக் கவரி மங்கையர் சுற்ற ஸ்ரீராமனை விடுத்து ஆர் ஆருக்கும் துய்ய தெய்வம் இவள் என்றெண்ணிக் கைகள் அஞ்சலி செய்ய (அன்) 3. சீவிய கூந்தல் மேலே பூர்ணச்சந்திரன் போல் தெரிந்திட ஒருக் காலே மாலிகைசூடி தரவில்லாமல் முன் னாலே தேவர்கள் செய்த தவம் வெளி வந்தாற் போலே மூவுலகும் செலுத்தும் ராவணனுக்குப் பண்டு முத்தி கொடுக்க வந்த சித்திரவடிவைக் கொண்டு தேவி இவள் என்றால் ராகவன் இந்தச் சின்ன சிலையோ ஒடிப்பான் ஏழு மலையும் ஒடிப்பான் என்ன (அன்) 4. தெரிசனம் காணப் போகுமோ சொல்ல என்றாலும் சேஷனாலேயும் ஆகுமோ இந்திராணி முதல் அரிவையர்க்கும் மெய் நாணுமே ராமனும் காண அனந்தம் கோடிக்கண் வேணுமே பிரமன் முதல் எதுவும் பெற்றவளுக்கு நல்ல உருவினில் இனிவேறு உடைமைகள்என்னசொல்ல அருமையா உலகிற் கல் யாணத்திற் பெண்கள் திருமங்கிலியத்தில் இடும் திருவாகிய எங்கள் (அன்) -0-0- |