| 48 ஸ்ரீராமர் மணக் கோலம் கொள்ளுதல் விருத்தம் -19 சீலம் கொண்டிப்படி வந்த சீதை மாதரொடும் சென்றாள் மூலங் கொண்ட கௌசிகனும் முகுர்த்தம் நாளை என்று சொன்னான் ஓலங்கொண்ட வேதன் முதல் ஓராயிரத் தெட்டண்ட மும்தன் கோலங் கொண்ட ராமன் மணக் கோலங் கொண்டான் கொண்டானே தரு-17 அசாவேரி ராகம் ஆதிதாளம் பல்லவி ராமசாமி கொண்ட கோலம் - என்னாலே சொல்லப் போமோ (ராம) அநுபல்லவி கோமிதிலை ராசன் முன் அனேக கோடி மன்மதனே நிகராக (ராம) சரணங்கள் 1. பாதம் கடகம் சேர்த்திரு மருங்கினில் பசும் பொன்னாடை போர்த்தி மார்பின் மீது பொன்னூல் ஏற்றிதன் நாமமும் விளங்கவே சார்த்தி சீதை ஆசையிது எனப்பா ராட்டி தெரிந்த சந்திர சூரியர் அதை நாட்டி ஓதிமாறு காதிலே ஒளிக் காட்டி குண்டலங்கள் பூட்டி (ராம) 2. சுமுகப் பட்டம் வரித்து நவரத்தின தொங்கல் மாலை பரித்து முடிமேல் விமல மகுடம் தரித்து பீதாம்பரம் மேனிமேலே விரித்து கமல மாமலர் ஆனது நாண கங்கணங்கள் செங் கையினிற் பூண அமிர்த முகச்சந்திரன் போல் முகங் காண யோககல் யாண (ராம) ஆகமீது வன்ன வன்னம் ஆனமணிகள் மின்ன பச்சை மேகம் போலே காந்தி விளங்கும் மேனியிற் கலவை ஏந்தி |