பக்கம் எண் :

49

     வாகுமந்தர கிரிமுறுக்       குண்ட
          வாசுகீஎன மணிவகை  கொண்ட
     நாகரீக கேயூரம் ஒளி       மண்ட
          வீரகோ             தண்ட              (ராம)

-----

கலியாணச் சடங்கு செய்தல்

விருத்தம் -20

    சக்கிரபதி ஆகிய ராகவன் இவ்வாறு
          சமைத்தநல்ல மணவாளக் கோலங்கொண்டான்
    அக்கணமே தம்பியரும் கோலங்கொண்டார்
         அரசர்களும் தசரதனும் மந்திரிமாரும்
    திக்கில்உள்ள முனைவரும்வே தியருங்கூடித்
         திரைகடல்போல் மிகப்பொங்கி மிதிலைதன்னில்
    முக்கியமுள்ள பலசடங்கின் விதிகள்எல்லாம்
         முறைசெய்தார் கலியாணத் துறைசெய்தாரே
 

திபதை-2

மோகன ராகம்                          அடதாளச்சாப்பு

கண்ணிகள்

1.    கல்யாண பேரிகை              அடித்தார்-சனகன்
       சொல்லிய வார்த்தையைப்      படித்தார்
     எல்லோரும் ஆனந்தம்          கூடினார்-அவர்
       எங்கெங்கும் நின்றுகூத்        தாடினார்

2.    வாழை கமுகுகள்               நாட்டினார்-நெடு
       வானமட்டும் பந்தல்           ஓட்டினார்
     ஆழிபோலே திரை             அமைத்தார்-அலங்
       கார வேதிகை                சமைத்தார்

3.   தூணுக்குத் தூண்உறை           பூட்டினார்-சந்திர
       சூரியர்போற் கண்ணாடி        மாட்டினார்
     சாணுக்குச் சாண்மாலை          தொடுத்தார்-தங்கத்
       தாலமும் கும்பமும்            எடுத்தார்