50 4. பொன்னரி மாலைகள் வீக்கினார்-முத்தும் பொன்னும் பவளமும் தூக்கினார் கின்னரி வீணைகள் பாடினார்-மெத்த கேளிக்கை மாதர்கள் ஆடினார் 5. பூரண கும்பங்கள் பதித்தார்-முக்கிய பூசுரர் வேதத்தால் துதித்தார் தோரணத் தால்வெளி மறைத்தார்-எங்கும் சொர்ண வருஷமா இறைத்தார் 6. மாணிக்கத் தீபங்கள் ஏற்றினார்-நல்ல வாடை கஸ்தூரிகள் தீற்றினார் ஆணிப்பொன் னாடைகள் சாத்தினார்-பனிநீர் ஆலைத் தெருவெங்கும் ஊற்றினார் 7. சந்தனத்தால் கோலம் தீட்டினார்-பஞ்ச தருவையும் நன்றாக நாட்டினார் சுந்தரப் பாலிகை கூட்டினார்-நறுந் தூபமும் தீபமும் காட்டினார் 8. பொன்னால வட்டமும் பட்டமும்-திவ்விய புஷ்பமும் விந்தமும் குந்தமும் தன்னார வண்ணமாக் கட்டினார்-எங்கும் தங்கப் பொடிகளாக் கொட்டினார் 9. மத்தளம் மல்லரி தாளங்கள்-பஞ்ச வாத்தியம் நரகெச மேளங்கள் தித்திகளால் சக்கிர வாளமும்-திக்கும் செவிடு படுமேஅண்ட கோளமும் 10. சனகனும் தசரத ராசனும்-வா சவனுடனே அள கேசன்போல் கனிவுள சந்தோஷம் மீறினார்-வந்து கலியாண மண்டபம் ஏறினார் 11. வெள்ளை விடையினை ஊர்ந்தார்-உமை வேணி யரன்வந்து நேர்ந்தார் வள்ளியும் கந்தனும் சேர்ந்தார்-மூத்த மைந்தன் வல்லபையும் சார்ந்தார் |