51 12. வேதனும் வாணியும் நாடினார்-தே வேந்திரன் இந்திராணியும் கூடினார் மாதவர் தேவர்மென் மேலே-அந்த மண்டபம் சேர்ந்தார்இப் பாலே 13. மங்களம்ஆம் ராமச் சந்திரன்-சூரிய வங்கிச மணியான தந்திரன் கங்கைமுதல் தீர்த்தம் ஆடினான்-மிகக் கலவைச் சலவைகள் சூடினான் 14. மாலை மகுடமு கத்தணி-பட்டம் வாகு வலயம்ச ரப்பணி காலணி கைவளை பாரித்தார்-பதக் கங்கள் முதல்அலங் காரித்தார் 15. தனதாம் பரதன்கை நீட்டவே-மற்ற தம்பியர் சாமரை ஆட்டவே கனக ரதங்கண்டு தாவினான்-ராமன் கலியாண வேதிகை மேவினான் 16. எப்பொ ருளும்பெற்ற கோதையை-அஷ்ட லட்சுமியும் ஆன சீதையை ஒப்பனை செய்யவும் தேடுமோ-என் ஒருத்தனாலே சொல்லக் கூடுமோ 17. பூமியுள் ளோர்க்கெல்லாம் ஆவியை-நல்ல பூவைஎனும் சீதா தேவியை சாமி அருகினி லேதந்தார்-வ திஷ்டரும் தருப்பைகொண் டூவந்தார் 18. முத்தான தண்டுலம் விரித்தார்-வேத முறையே சடங்கெல்லாம் தரித்தார் உத்தம மந்திரம் விளைத்தார்-முனிவர் ஓமாக்கினியை வளர்த்தார் 19. தான தருமங்கள் ஓங்கவே-ரா க்ஷதர்போய்ப் பூமிபாரம் வாங்கவே வானவ ருக்கின்பம் சுற்றவே-ஓமம் வலங்கொண் டெழுந்தது மெத்தவே |