பக்கம் எண் :

52

20.   சல்லாபன் ஆகிய               நேசன்-சீதை
          தன்னை அந்தமிதி              லேசன்
     எல்லாரும் காணமுன்            னாலே-சொல்லி
          ஈந்தானே ராமன்கை        மேலே

21.   அய்யனும் தையல்கைப்          பிடித்தான்-கலி
          யாணவிதி யெல்லாம்        முடித்தான்
     செய்யவ ளந்திரு               மாலே-போலச்
          சேர்ந்தெழுந் தாரேமென்    மேலே

-----

ஸ்ரீ ராமர் அக்கினி வலம் வருதல் முதலியதுகன்

விருத்தம்-21

    ராகவன் சீதையைப்பாணி கிராணம் செய்து
        நற்றீயை வலம்வந்தான் சீதை பாதம்
   மோகமுடன் பற்றிஅம்மி மீதில் வைத்தான்
         முக்காலும் அருந்ததிமுன் காட்டினான்பின்
   ஏகமன துடன்முனிவர் தந்தை தாய்மார்
         எல்லார்க்கும் சேவித்தான் அப்பால் இன்பம்
   ஆகவொரு நன்மணையில் சீதை யோடும்
         அமர்ந்திட்டான் அண்டமெல்லாம் சுமந்திட்டானே.

சோபனம் பாடுதல்

விருத்தம்-22

    மணம்உள்ள மலர்மாரி அந்த வேளை
          வானவர்கள் பொழிந்திட்டார் முனிவர் எல்லாம்
    கணம்உள்ள ஆசீர்வா தங்கள் சொன்னார்
          காவலர்கள் பொன்மலர்கள் சொரிந்தார் தாய்மார்
    பணம்உள்ள நல்வரிசை பலவும் ஈந்தார்
          பத்தியுள்ள பந்துக்கள் எல்லாம் மொய்த்தார்
     குணம்உள்ள சுமங்கலிகள் அங்கே வந்து
         கூடினார் சோபனங்கள் பாடி னாரே

தரு-18

மத்தியமாவதி ராகம்                       ஆதிதாளம்

பல்லவி 

     சோபனம் சோபனம் - ராம - சாமிக்கும் சீதைக்கும்
     சோபனம் சோபனம்                  (சோ)