பக்கம் எண் :

53

அநுபல்லவி

     பூபன் தசரத மதிக்கும்      சோபனம்
     புண்ணிய சனகபூபதிக்கும்    சோபனம்  (சோ)

சரணங்கள்

1.    தாமம் மேவிய ரதிக்கும் ரதிசுந் தரனுக்கும்     சோபனம்
          சீர்மகள் இந்திராணிக்கும்இந் திரனுக்கும்  சோபனம்
     மாமதிபெருகும் வாணிக்கும் அவள் வரனுக்கும் சோபனம்
          தாமரை மலத்திருவுக்கும் தாமோதரனுக்கும்   
                   தேவிக்கும் அரசனுக்கும்      சோபனம்(சோ)

2.    நேர்வரும் சுமந்திரன் முதல்மந்திரி நேசர்க்கும்       சோபனம்
          நேர்பெறு வதிஷ்டன் கௌசிகன்முதலாம்
                        யோகீசர்க்கும்               சோபனம்
     வார்முலை அரம்பை மாதர்க்கும் எண்டிசைவாசர்க்கும் சோபனம்
      சேவைசெய்து மனம்மகிழும் ஐம்பத்தாறு தேசர்க்கும்  சோபனம்
              ராசாதி ராசர்க்கும்                     சோபனம்(சோ)

3.   வருகௌசலை கைகை சுமித்திரைஎனும்தாய்    மாருக்கும்
     பெருகு பரதன் முதலாகிய மூன்று           பேருக்கும்
     ஒருமையால் இதுசொன்ன வால்மீகிகம்பரிரு    வோருக்கும்
     அருணாசலம் நாடகம் இதுபடிப்             பாருக்கும்
                  கேட்கும்எல்               லாருக்கும் (சோ)

          -----    

ஸ்ரீராமருக்கும் பரசுராமருக்கும் சம்வாதம்

விருத்தம்-23

    திருமகளாம் சானகிகல் யாணம் செய்து
          செயமுள்ள தம்பியர்க்கும் விவாகம் செய்து
    வரும்வழியிற் சகுனவிரோ தத்தி னாலே
          மலைபோலே முனிபரசு ராமன் வந்தான்
    பெருகுதச ரதன்கண்டு நடுங்கும் போது
          பிரசண்ட கோதண்டகுரு ராமன் தானும்
    ஒருவரும்நே ரில்லைஎன வில்லை ஏந்தி
          உரஞ்சொல்வான் உடனேஉத் தரஞ்சொல் வானே.