பக்கம் எண் :

54

திபதை-3

கலியாணி ராகம்                               ஆதிதாளம்

கண்ணிகள்

1.    மண்ணில் அரசர்போலக் காணுகின்றாயே ஆசீர்
          வாதம் ரகு                            ராமா
     கண்ணில் வேதியர் போல் தோணுகின்றாயே நமஸ்
          காரம் பரசு                            ராமா

2.    தாடகை எனும்பெண்மேல் சண்டை கொள்ளராசர்க்கு
              தான்விதி யோ                     ராமா
     வேடர்கள் தொடுக்கும்வில்லை பிராமணர் தொடத்தலை
              விதியோ பரசு                      ராமா

3.   ஆனாற்பெண் கொலைசெய்யல் ஆமோ உனக்கிது
              அடைவோ ரகு                     ராமா
     தானாகப் பெற்றெடுத் தாயைக் கொலை செய்தாயே
              தகுமோ பரசு                       ராமா

4.   தருமமா என்னைப்பெற்றதகப்பன் சொற்படிசெய்தேன்
              தாய்கொலையோ                    ராமா
     குருவார்த்தை தடுக்காமல் நானும் செய்தேன் பெண்
              கொலையோ பரசு                   ராமா

5.    சொத்தைவில் ஒடித்தத்தை மெத்த மெத்தவே எண்ணித்
              துள்ளாதே ரகு                      ராமா
     கற்ற வேதியன்என்று பொறுத்தேன் பொறுத்தேன் குதிக்
              காதே பரசு                         ராமா

6.    அந்தவில் வளைத்தாயே இந்தவில் வளை இந்தா
              அடடா ரகு                        ராமா
     இந்தா வளைத்தேன் இதில் வைத்த அம்புக்கு வழி
              எங்கே பரசு                       ராமா

7.    அம்புக்கு வழியில்லை நான் பிராமணன் இனி
              அனுக்கிரகம் செய்                   ராமா
     பின்புத்திக் காரன் இரு பிறப்பன் உன்னொ டென்ன
              பேச்சு பரசு                        ராமா