15. | உடனாகவே இருந்து உணர அரி யானோடு கடல் நீரும் ஆறும்போல் கலந்தனையே; நெஞ்சமே! |
| |
16. | நெடியகத்தைப் போக்கி, நின்ற சழக்கறுத்துப் படிகத்துக் கும்பம்போல் பற்றினையே; நெஞ்சமே! |
| |
17. | மேலாகி எங்கும் விளங்கும் பரம் பொருளில் பாலூறும் மென் சுவைபோல் பற்றினையே; நெஞ்சமே! |
| |
18. | நீரொடுதண் ஆலிவிண்டு நீரான வாறேபோல் ஊரொடுபேர் இல்லானோடு ஒன்றினையே; நெஞ்சமே! |
| |
19. | இப்பிறப்பைப் பாழ்படுத்தி இருந்தபடி யேஇருக்கச் செப்ப அரிதாய இடம் சேர்ந்தனையே; நெஞ்சமே! |
| |
20. | மேலாம் பதங்கள் எல்லாம் விட்டுவிட்டு ஆராய்ந்து நாலாம் பதத்தில் நடந்தனையே; நெஞ்சமே! |
| |
21. | கடங்கடங்கள் தோறும் கதிரவன் ஊடாடி அடங்கும் இடம்தான் அறிந்து அன்புற்றாய்; நெஞ்சமே! |
| |
22. | கற்றவனாய்க், கேட்டவனாய்க், காணானாய்க், காண்பவனாய் உற்றவனாய் நின்றதிலே ஒன்று பட்டாய் நெஞ்சமே! |
| |
23. | நாலு வகைக் கரணம் நல்குபுலன் ஐந்தும் ஒன்றாய் சீலமுற்று நின்றதிலே சேர்ந்தனையே நெஞ்சமே! |
| |
24. | விட்டிடமும், தொட்டிடமும், விண்ணிடமும், மண்ணிடமும் கட்டும்ஒரு தன்மைஎனக் கண்ணுற்றாய்; நெஞ்சமே! |
| |
25. | எந்தெந்த நாளும் இருந்தபடி யேஇருக்க அந்தச் சுகாதீதம் ஆக்கினையே; நெஞ்சமே! |
| |
26. | வாக்கிறந்து நின்ற மனோகோச ரம்தனிலே தாக்கறவே நின்றதிலே தலைசெய்தாய்; நெஞ்சமே! |
| |
27. | எத்தேசமும் நிறைந்தே எக்கால மும்சிறந்து, சித்தாய சித்தினிடம் சேர்ந்தனையே; நெஞ்சமே! |
| |
28. | தாழாதே நீளாதே தன்மய மாய்நிறைந்து வாழாதே வாழ மருவினையே; நெஞ்சமே! |