வீரச்சுண்ணம் வெள்ளியதாம் - ஆத்தாளே வெள்ளிபதி னெட்டாகும் பூரச்சுண்ணஞ் சேர்க்கவடி - ஆத்தாளே பொன்வயதோ எண்ணான்காம். | 68 |
| | |
சிலபற்பம் செம்பினிலே - ஆத்தாளே சேர்க்கவய எட்டரையாம் துலையாக் கவர்கோடி - ஆத்தாளே சொன்னார் திருமூலர். | 69 |
| | |
பார்த்தேனடி கண்டேனடி - ஆத்தாளே பாசங் குருபாதம் காத்தேனடி கண்டேனடி - ஆத்தாளே கைமுறையாம் என்னூல்தான். | 70 |
| | |
கருவை ஒளியாமல் - ஆத்தாளே காசினியில் உள்ளோர்க்குக் குருவைநாம் காண்பித்தோம் - ஆத்தாளே குணமான வாதவித்தை. | 71 |
| | |
உண்டென்ற பேர்க்குமடி - ஆத்தாளே உண்டாய் இருக்குமடி சண்டாளன் ஆனாக்கால் - ஆத்தாளே தான்லபிக்க மாட்டாதே. | 72 |
| | |
லபிக்க வழி சொல்லுகிறேன் - ஆத்தாளே நந்திதிரு மூலரையும் லபிக்கக் கா லாங்கியையும் - ஆத்தாளே நாதாந்தப் போகரையும். | 73 |
| | |
சத்தி சிதம்பரமும் - ஆத்தாளே சட்டைமுனி பூசைசெய்வாய் உத்தமக் கொங்கணரை - ஆத்தாளே உசிதமாய்ப் பூசைசெய்வாய். | 74 |
| | |
கருவூரா னானந்தர் - ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர் | |