நாற்பதுநாள் கொள்வாரேல் - ஆத்தாளே நற்கதவு ஐஞ்சுந் திறக்கும் தீர்க்கமதாய் சித்தியுண்டாம் - ஆத்தாளே தேகம் வச்ரகாயமதாம். | 83 |
| | |
மறவாமற் கற்பவகை - ஆத்தாளே மனசாரத் தின்றுவிட்டால் இறவாமல் அட்டசித்தி - ஆத்தாளே இக்கற்பங்கொண்ட பின்பு. | 84 |
| | |
உற்றதொரு கற்பமதை - ஆத்தாளே உணவாகத் தின்றுவிட்டால் செத்திறந்து போவதில்லை - ஆத்தாளே திடமா யிருக்குமடி. | 85 |
| | |
கெதிபெற வேணுமென்றால் - ஆத்தாளே கேளாம லேகேட்டு மதியமுதம் கொண்டபின்பு - ஆத்தாளே மறுகற்பம் கொண்டிடுவாய். | 86 |
| | |
வேதாள கற்பமதை - ஆத்தாளே விதுவளரும் அட்டமிநாள் மாதாவிம் மூலிகைக்கு - ஆத்தாளே மயமாய்நெய் வேத்யமிட்டு. | 87 |
| | |
நமக்கரித்துத் தரம்நோக்கி - ஆத்தாளே நயமாக வாங்கிவந்த நமக்கார சித்தியுடன் - ஆத்தாளே நன்றாய் நிழலுலர்த்தி. | 88 |
| | |
சூரணஞ் செய்தேதான் - ஆத்தாளே சுயமான நாள்பார்த்து மீரும் வெருகடியாய் - ஆத்தாளே வேண்டுந்தேன் நெய்சேர்த்து. | 89 |
| | |
கொள்ளவே மண்டலந்தான் - ஆத்தாளே கூறுமட்ட சித்தியுண்டாம் | |