நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்குப் பட்டலவோ பகையாரோ விண்டவர்கள் - என் ஆத்தாளே பாசம் பகையாச்சே. | 142 |
| | |
என்னையிவன் சுட்டாண்டி எங்கே இருந்தான்டி கன்னி அழித்தாண்டி - என் ஆத்தாளே கற்பைக் குலைத்தான்டி. | 143 |
| | |
உள்ளுரையிற் கள்ளனடி உபாயம் பலபேசிக் கள்ளக்கண் கட்டியடி - என் ஆத்தாளே காலைப் பிடித்தான்டி. | 144 |
| | |
பற்றத்தான் பற்றுவரோ பதியி லிருந்தான்டி எற்றத்தான் என்றவரோ - என் ஆத்தாளே என்னை அறிந்தான்டி. | 145 |
| | |
கண்டாருக்கு ஒக்குமடி கசடுவித்தை அத்தனையும் பெண்டாக வைப்பனென்று - என் ஆத்தாளே பேசாது அளித்தான்டி. | 146 |
| | |
மால்கோட்டை இட்டுமென்னை வசையிலாக் காவல்வைத் தோல்கோட்டை இட்டடியோ - என் ஆத்தாளே தடுமாறச் சொன்னான்டி. | 147 |
| | |
எந்தவித மோஅறியேன் இம்மாயஞ் செய்தான்டி சந்தைக் கடைத்தெருவே - என் ஆத்தாளே தடுமாறச் சொன்னான்டி. | 148 |
| | |
சூலத்துக்கு ஆதியடி துன்பமுற வந்தூடே பாலத்தில் ஏறியடி - என் ஆத்தாளே பங்கம் அளித்தான்டி. | 149 |
| | |
பண்டிவனை நானறியேன் பலகாலம் வந்தான்டி அண்டி இருந்தான்டி - என் ஆத்தாளே ஆகலத்தில் வைத்தான்டி. | 150 |
| | |
பத்தினியாய் என்நாளும் பாடறிந்து சூடாமல் மத்தியா னத்தில் என்னை - என் ஆத்தாளே வாசிரிக்கச் சொன்னான்டி. | 151 |