தெள்ளும் அவர்களுக்கு - ஆத்தாளே தேவ வருடமதில். | 90 |
| | |
பதினா யிரவருடம் - ஆத்தாளே பண்பாய் இருப்பனடி ரதிவேதப் பெண்முதலாய் - ஆத்தாளே நன்மையுடன் மேவுவர் பார். | 91 |
| | |
பூலோக மாதர்களை - ஆத்தாளே புகலவே ஆகாது மேலோகப் பெண்கள்சித்தி - ஆத்தாளே மேவுதற்குந் தானாகும். | 92 |
| | |
கையான்சங் காயளவு - ஆத்தாளே கறிமிளக திற்பாதி செய்யாதி மண்டலமே - ஆத்தாளே தின்றால் நரைகளில்லை. | 93 |
| | |
திரையில்லை அட்டசித்தி - ஆத்தாளே தேகமது எவ்வர்ணமாய் வரைவச்ர காயமதாம் - ஆத்தாளே வயதுமுந் நூறிருப்பன். | 94 |
| | |
கொடுப்பையிலை லேசாக - ஆத்தாளே கொள்வாயோர் மண்டலமே நடுக்கமில்லை தான் பகலில் - ஆத்தாளே நட்சத் திரந்தோன்றும். | 95 |
| | |
பத்தியம் பச்சரிசி - ஆத்தாளே பாலிட்ட சோறாகும் மத்தொன்றும் ஆகாதே - ஆத்தாளே வண்மையுடன் இக்கொடுப்பை. | 96 |
| | |
சமூலம் கழுவிநன்றாய் - ஆத்தாளே தயவாய் நிழல் உலர்த்தி சமூலம் இடித்துநன்றாய் - ஆத்தாளே சதிராகச் சூரணஞ்செய். | 97 |