பக்கம் எண் :

458கவிமணியின் கவிதைகள்

Untitled Document

1025 - 1030 சுத்தானந்த பாரதி

     ‘மலரும் மாலையும்’ தொகுதியில்     ‘தவயோகி வாழ்க’; ‘சுவாமி
சுத்தானந்த பாரதி    புத்தேரிக்கு வந்தபோது பாடிய பாடல்கள்’ என்ற
தலைப்பில் உள்ள   பாடல்கள் ஒரே தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
1028 - 1030 ‘தொண்டன்’ சித்திரை (1951) இதழில் வந்தவை.‘தொண்டன்’
மாத இதழில் வந்த     இப்பாடல்களுடன் “தமிழ் நாட்டுத் தனிப்பெருந்
தவயோகி சுவாமி சுத்தானந்த பாரதியார் 14-3-1951 அன்று புத்தேரிக்குச்
சென்று கவிமணியைத்    தரிசித்தார்கள். இருவர் தம் வாழ்வில்இதுவே
முதல் சந்திப்பு. அவ்வமயம்  பாரதி அவர்களுக்குக் கவிமணி அவர்கள்
வழங்கிய வாழ்த்து” என்னும் குறிப்பு உள்ளது.

1029 பா.பே. வரிகள் 3, 4

இந்திய ... தழைத்து
பொன்னியும் வற்றாப் பொருநையும் போலநீ
மன்னுலகில் வாழ்க மகிழ்ந்து

1031 - 1036 இராஜாஜி


     1031 - 36 - இராஜாஜி வங்காள      கவர்னராய் இருந்த போது
பாடப்பட்டவை.

     1036 - ‘நெல்லைச் செய்தி’ வார இதழ் 22-6-1952. இதில்“நெல்லை
நகர சபையின் மூன்றாவது தேசியப் பொருட்காட்சியைக் கனம் இராஜாஜி திறந்து வைக்கும்    வைபவத்திற்காகக் கவிமணி திரு. தேசிக விநாயகம்
பிள்ளை அவர்களின் வாழ்த்துப் பாக்கள்” என்ற குறிப்பு உள்ளது. இதில் இராஜாஜியின் படமும்உண்டு.

1031 ப.பே வரி 3 சென்னை மக்கள் - சென்னைத் தமிழர்
1033 ப.பே. வரி 1 எங்கும் மக்கள் - எங்கும் மனிதர்
1035 ப.பே. வரி 2 புண்ணியஞ்சேர் - பண்ணைமிகும்

(1038 - 1939) ப. சம்பந்த முதலியார்


     தமிழில் சிறந்த நாடக  ஆசிரியரான ராவ்பஹதூர் பம்மல் சம்பந்த
முதலியாரின் (1873-1964)        எண்பதாம் ஆண்டு விழாவிற்கு (1953)
எழுதப்பட்ட பாடல்கள்.

1040 சிதம்பர நாதன்

ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி)
இவர் திருவிதாங்கூர் ராஜ்ய அமைச்சராக இருந்தவர்.