பக்கம் எண் :

464கவிமணியின் கவிதைகள்

Untitled Document

சுபாஷ் சந்திரபோஸ் ஒப்பற்ற வீரர். தன்னலமற்ற தியாகி. இந்திய நாட்டு
விடுதலைக்காக அல்லும் பகலும் அயராது உழைத்தவர்.புரட்சியினாலேயே
ஆங்கிலேயர் ஆட்சியை      ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்
இந்தியாவை விட்டு     வெளியேறி, பர்மாவில் இந்திய தேசிய ராணுவம்
அமைத்துப் போராடி, அன்னிய ஆட்சியின் அதிகார பீடத்தை அசையச்
செய்தவர். அவரை எந்நாளும்  நினைத்துப் பாராட்ட வேண்டியது நமது
கடமையாகும்.          அந்நோக்கத்துடன் தமிழ்மொழியின் தாயகமான
மதுரையிலேயே நேதாஜி பெயரால் ஒரு பத்திரிகை வெளிவரப் போவதை
அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
    
     நேதாஜி நீடுவாழ்க!”

1123 - 1124 யுவதி

     ம.மா.தொ.இ. பாடல்கள் (கை.எ.பி.)

     “அருள் நிலைய           ஆசிரியர் திருச்சி இராமச்சந்திரபுரம்
சுப.குட்டையன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு தொடங்கும் ‘யுவதி’
பத்திரிகைக்கு 12-11-1948      அனுப்பின வாழ்த்துப்பா” என்ற குறிப்பு
கை.எ.பி.யில் உள்ளது.

1125 - 1129 கலைக்கதிர்

     1125-1127 எண் கொண்ட     மூன்று பாடல்களும் ‘கலைக்கதிரி’ன்
இரண்டாம் இதழிலும்        (1949 ஜனவரி) 1128 எண் கொண்ட பாடல்
‘கலைக்கதிர்’       பொங்கல் மலரிலும் (1950), வெளிவந்தன. 1129 எண்
கொண்ட       பாடல் ‘மலரும் மாலையும்’ தொகுதியில் இல்லாதது. இது
‘கலைக்கதிர்’ 1953 ஜனவரி இதழில்  வந்தது. 1125 எண் கொண்ட பாடல்
சிறுமாற்றத்துடன் ‘ஜோதி’    இதழில் (1950 ஜனவரி) வந்துள்ளது. பாடல்
கீழ் வருமாறு

     ஆதிபகவன் அறவாழி அந்தணணன்
     யாதும் உவமையிலான் இன்னருளால் - ஜோதிமலர்
     பல்லாண்டுலகில் பரிமளம் வீசுகவே
     எல்லோரும் போற்ற இனிது.

1130 நவ இந்தியா

     ம.மா.தொ.இ.பா. (14-1-1949)      முந்திய தலைப்பு “நாட்டுக்கொரு
கவிஞர் நவ இந்தியாவை வாழ்த்துகிறார்.”