"The Evolution of Man." By Professor Haeckel P. 264 "The third, and last, stage of our animal ancestry is the true of speaking man (Homo), who was gradually evolved from the preceding stage by the advance of animal language into articulate human speech. As to the time and place of this real "creation of man" we can only express tentative opinions. It was probably during the Diluvial period in the hotter zone of the Old World either on the mainland in tropical Africa or Asia, or on an earlier continent (Lemuria now sunk below the waves of the Indian Ocean), which stretched from East Africa (Madagascar, Abyssinia) to East Asia (Sunda Islands, further India). I have given fully in my "History of creation" the weighty reasons for claiming this decent of man from the anthropoid eastern apes and shown how we may conceive the spread of the various races from this "Paradise" over the whole earth. I have also dealt fully with the ralations of the various races and species of men to each other. "நாம் மிருகங்களினின்று உற்பத்தியான மூன்றுபடிகளையும் சொல்லுமிடத்து அவைகளில் கடைசிப் படியேதென்றால் ஓமோ (Homo) அதாவது பேசக்கூடிய மனிதனே. ஓமோ (Homo) என்ற மனிதன் முந்தினபடியினின்றும் மிருகபாஷை மனிதபாஷையாய் விர்த்தியானதில் நாளா வர்த்தியில் ஜெனித்தவன். இந்த மனிதன் எப்படி உண்டானானென்றாவது எவ்விடத்தில் உண்டானானென்றாவது அதிக நிச்சயமாகச்சொல்லமுடியாது. அநேகமாய் பழைய உலகத்தின் காங்கையான பாகத்தில் ஜலப்பிரளய காலத்தில் ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவின் தளபாகத்திலாவது, அல்லது அதற்குமுன்னிருந்த லெமூரியா என்னும் அழிந்துபோன கண்டத்திலாவது உண்டாயிருக்கவேண்டும். (இந்து சமுத்திரத்தில் மூழ்கிப்போன இந்தக் கண்டமானது கீழ் ஆப்ரிக்கா அதாவது மதகாஸ்கர் அபிசினியாதேசம் முதல் கீழ் ஆசியா அதாவது சந்தாதீவுகள் கிழ்க்குக் கோடி இந்தியாவரை விசாலித்திருந்தது.) "சிஷ்டிப்பின் சரித்திரம்" என்று நான் எழுதியநூலில் மனிதன் எப்படி (anthropoid) கிழக்குதேச குரங்கிளிலிருந்து உற்பத்தியானான் என்பதற்கும் எப்படி ஆதியில் பாலஜாதியாரும் நான் சொல்லிய கண்டமாகிய இந்தப் பரதீசினின்று பல இடங்களுக்குப் பிரிந்து போனார்கள் என்பதற்கும் திடமான ஆதாரங்களை எடுத்துக் கூறியிருக்கிறேன். பல ஜாதியாருக்குமுள்ள வித்தியாசங்களையும், ஒரேவிதமான ஜாதிகளுக்குள் இருக்கப்பட்ட நெருங்கிய சம்பந்தத்தையும் அந்தப் புஸ்தகத்தில் விஸ்தாரமாய்ச் சொல்லியிருக்கிறேன்." மேற்கண்ட வரிகளை நாம் கவனிக்கையில் பேசக்கூடிய மனிதன், பேசக்கூடாத வாலில்லாக் குரங்கினின்றும் உற்பத்தியானான் என்றும், மிருக பாஷையினின்றே மனிதபாஷை நாளடைவில் விருத்தியானதென்றும், அப்படி விருத்திக்குவந்த அதாவது பேசக்கூடிய மனிதன் உஷ்ணப் பிரதேசத்தில் வசித்தானென்றும், அது ஒரு காலத்தில் முழுகிப்போயிற்றென்றும், அம்முழுகிப்போன இடமே லெமூரியாவென்றும், அது ஆப்ரிக்கா, மதகாஸ்கார், அபிசினியா, சந்தா, இந்தியா முதலிய பூபாகங்களுக்கு சமீபத்திலிருந்ததென்றும், இந்த இடமே ஆதியில் மனிதர் உண்டான பரதீசாயிருந்ததென்றும், அது அழிந்துபோனபின் அதற்கு சுற்றுப்பக்கங்களிலுள்ள இடங்களுக்குப் பிரிந்துபோனார்களென்றும் தெளிவாகத் தெரிகிறது. லெமூரியா என்னும் இந்த பழைய உலகத்தில் தென்மதுரையிருந்ததென்றும், தென்மதுரையில் தமிழ்ச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு 4,400 வருஷங்களுக்குப் பின் கடலால் அழிந்துபோனதென்றும், அவ்விடத்தில் பேசிவந்த தமிழ்ப் பாஷை பல இடங்களுக்கு கொண்டுபோகப்பட்டு பல பாஷைகளிலும அங்கங்கே காணப்படுகிறதென்றும் இதன்முன் பார்த்தோம். இத்தமிழ்ப் பாஷையே இயற்கையாயுள்ள மிருகபாஷைகளின் சில ஓசைகளையுடையதாயிருக்கிறதென்றும் இது ஒப்பற்ற தனிப்பாஷையாய் நாளதுவரையும் இருந்துவருகிறதென்றும் இதற்குமுன் கவனித்தோம். ஆனால் அப்படி ஒரு பாஷை எல்லா பாஷைகளுககும் ஆதியாயிருந்திருக்குமா என்று நாம் நினைப்போம். அவ்விஷயத்தில் எக்கேல் (Haeckel) என்னும் மகா தத்துவ சாஸ்திரியார் சொல்லுவதைப் பார்ப்போம்.
|