பூமியில் புல்பூண்டு மிருக உற்பத்தி உண்டான இந்த ஐந்தாவது அதாவது கடைசி காலத்தில் தான் மனிதனின் பூரண உற்பத்தியும் அவன் பல ஜாதியாயப்பிரிந்த விஷயமும் நடந்தன, அதினால்தான் அதற்கு Anthropozoic அதாவது மனிதன் உயிரைப்பெற்ற காலமென்றும் நான்காவது (Quarternary period) காலமென்றும் பெயர். பூர்வ மிருகங்களைப்பற்றிப் பேசும் சாஸ்திரமும் பூர்வ ஜாதிகளைப்பற்றிப் பேசும் சாஸ்திரமும் பூரணப்படாததால் மனித ஜாதி, அழிந்துபோன ஒரு வாலற்ற குரங்கு அல்லது Lemur என்னும் மிருகத்திலிருந்து இந்த நாலாவது காலத்தின் துவக்கத்திலோ அல்லது Tertiary காலத்தின் நடுவிலோ கடைசியிலோ உற்பத்தியானதென்ற கேள்விக்குப் பதில் உரைப்பது கஷ்டமாயிருக்கிறது, ஆனால் ஒன்றுமாத்திரம் நிச்சயம். நாகரீகம் விர்த்தியானது Anthropozoic காலத்தில்தான். ஆனால் ஜீவராசிகளின் முழு சரித்திரத்தையும் அடக்கிக்கொண்டிருக்கும் பிரமாண்டமான கால அளவிற்குள் இந்த Anthropozoic காலமானது ஒரு சிறு அண்டம்தான். இதை நாம் நினைக்கையில் சரித்திரம் என்பது நாகரீக காலத்தைக் குறிக்கிறது என்று சொல்வது ஏளனம் பண்ணுவதுபோல் இருக்கிறது. ஆதி அணு (Monera) தானாய் உற்பத்தியான காலமுதல் தற்காலம் வரைக்குமுள்ள ஜீவராசிகளின் காலம் முழுதையும் நூறு சமபாகங்களாகப் பிரித்து, ஐந்து முக்கிய காலங்களின் அளவையும், அவைகளுக்குள்ள ஸற்றேற்றாவின் (Strata) பருமனுக்குத் தக்கதாக அவைகளின் காலத்தையும் நிச்சயித்தால், பின்வரும் Percentage (அதாவது நூற்றுக்கும் அந்தந்தக் காலங்களுக்குமுள்ள தாரதம்மியம்) வரும் :- (i) | ஆதிதுவக்கக் கல்லின் காலம் Areheolithic orAreheozoic (Primordial) | ... | 53 | .6 | (ii) | பழைய கல்லின் காலம் Paleolithic or paleozoic(Primordial) | ... | 32 | .1 | (iii) | மத்திய கல்லின் காலம் Mesolithic or Mesozoic(Secondary) | ... | 11 | .5 | (iv) | பிந்திய காலக்கல்லின் காலம் Cenolithic orCenozoic (Tertiary) | ... | 2 | .3 | (v) | மனிதர் உற்பத்தி கல்லின் காலம் Anthropolithicor Anthropozoic (Quarternary) | ... | 0 | .5 | | | | ------- | | | | 100 | .0 |
என்றாலும் சரித்திர காலத்தை மற்றக்காலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம்முடைய கிரகமாகிய பூமியிலேயே மனித வாசனையில்லாத பூர்வகாலத்தின் அளவுக்கும் இதற்கும் அனந்தகால வித்தியாசம் இருக்கிறது. அந்தப்பூர்வ காலங்களோடு ஒப்பிடப்படும்போது இதோ அதிக சிறியதாய் இருக்கிறது. மம்மேலியா வகுப்பைச் சேர்ந்த உயர்ந்த பிராணிகள் உண்டான முக்கியமான Cenozoic காலங்கூட மொத்தத்தில் நூற்றில் இரண்டுதான்." இதில் இற்றைக்குமுன் ஜீவன் உற்பத்தியானதாக நினைக்கும் காலத்தை 5 கோடி வருஷமாக வைத்துக்கொண்டு அதை நூறு பாகமாகப்பிரித்து அதில் ஐந்து காலம் சொல்லுகிறார். அதில் நாலாவது காலத்தின் மத்தியில் குரங்கினமும் அதன்பின் மனுஷனும் உண்டாயிருந்தனென்றும் ஐந்தாவது காலத்தில் மனுஷன் பேசவும் தன் இஷ்டம்போல் மற்ற இடங்களுக்குப்போகவும் வரவும் கூடியவனாயிருந்தானென்றும் சொல்லுகிறார். இநத ஐந்தாவது காலம் இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் வருஷமென்று அவர் கணக்கால் தெரிகிறது. இந்த இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் வருஷத்தின் துவக்கதில் பேசவும் சஞ்சரிக்கவும் ஆரம்பித்த மனுஷன் சுமார் இற்றைக்கு 50,000 வருஷங்களுக்கு முன்னாலாவது சில நாகரீகமும் தேர்ச்சியும் பெற்று விருத்தியாகியிருக்கவேண்டுமென்று நாம் நினைக்கலாம். இற்றைக்கு சுமார் 20,000 வருஷங்களுக்கு முன்னாலேயே அவன் எழுதத் தெரிந்தவனாகவும் பல கலைகள் தெரிந்தவனாகவுமிருந்திருக்க வேண்டும். 30. முதல்முதல் மனிதஜாதி உண்டான இடம் லெமூரியாவென்பது. இப்படி முதல்முதல் தேர்ச்சிபெற்ற மனுஷ ஜாதி பழைய உலகம் அல்லது லெமூரியாக் கண்டத்திலேயே யிருந்திருக்கவேண்டுமென்றும் அக்கண்டம் அழிந்தபின் பல இடங்களுக்குப் பிரிந்துபோயிருக்கவேண்டும் பின்வரும் வசனங்களில் காணலாம்.
|