பக்கம் எண் :

101
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

மனிதரைப்போல் பெரியவைகள், முக்கியமாய் மதகாஸ்கார் தீவிலுள்ள டைலூவியல் லெமுராகனான மெகல டேப்பிஸ் (diluvial lemurogonon Megaladapis) என்னும் ஜாதிக்குரங்குகள்."

அவைகளில் அழிவுக்குத் தப்பி உயிரோடிருப்பவை பழைய உலகம் அல்லது லெமூரியாவின் பக்கத்து இடமான மதகாஸ்கார், சந்தா முதலிய தீவுகளிலும் ஆசியா ஆப்பிரிக்கா கண்டங்களின் தரைபாகங்களிலும் வசிக்கின்றன என்பதாகத் தெளிவாய்த் தெரிகிறது.

29. மனித உற்பத்தியின் காலத்தைப்பற்றி.

மனிதர்கள் உற்பத்தியான காலத்தையும் அவர்கள் பேசும் சக்தி பெற்ற காலத்தையும் ஒருவாறு இன்னதென்று பின்வரும் வசனங்களில் காணலாம்.

"The Evolution of Man." By Professor Hackel P. 203

"The first appearance of man, to be more precise, the development of man from some closely related group of Apes, probably falls in either the miocene or the pliocene period, the middle or the last section of the Tertiary period. Others believe that man properly so-called man endowed with speech was not evolved from the non-speaking ape-man (Pithecan thropus) until the following, the anthropozoic age. In this fifth and last section of the organic history of the earth we have the full development and dispersion of the various races of men, and so it is called the Anthropozoic as well as the Quaternary period. In the imperfect condition of paleontological and ethnographical science we cannot as yet give a confident answer to the question whether the evolution of the human race from some extinct ape or lemur took place at the beginning of this or towards the middle or the end of the Tertiary period. However this much is certain--the development of civilisation falls in the anthropozoic age, and this is merely an insignificant fraction of the vast period of the whole history of life. When we remember this, it seems ridiculous to restict the word "history" to the civilised period. If we divide into a hundred equal parts the whole period of history of life, from the spontaneous generation of the first monera to the present days and if we then represent the relative duration of the five chief sections or ages, as calculated from the average thickness of the strata they contain, as percentages of this, we get something like the following relation:

(i)Archeolithic or archeozoic (Primordial)age...53 .6
(ii)Paleolithic or paleozoic (Primary)age...32 .1
(iii)Mesolithic or Mesozoic (Secondary)age...11 .5
(iv)Cenolithic or cenozoic (Tertiary)age...2 .3
(v)Anthropolithic or anthropozoic (Quaternary)age...0 .5
--------

100

.0

In any case, the "Historical period" is an insignificant quantity compared with the vast length of the preceding ages, in which there was no question of human existence on our planet. Even the important Cenozoic or Tertiary period, in which the first placentals or higher mammals appear, probably amounts to little over two percent of the whole organic age.

"மனிதனின் ஆதி உற்பத்தியின் காலம், அல்லது கராராய்ச் சொல்லவேண்டுமானால், மனிதன் அவனுக்கு நெருங்கிய சம்பந்தமுள்ள ஒருவிதக்குரங்கு ஜாதியிலிருந்து உற்பத்தியான காலமானது மியோசீன் (Miocene) காலத்திலாவது, பிளையோசீன் (Pliocene) காலத்திலாவது அதாவது Tertiary காலத்தின் மத்தி அல்லது கடைசிக்காலம் என்று சொல்லவேண்டும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், மனிதன் அதாவது சரியாய்ப் பேசக்கூடிய தத்துவமுள்ள மனிதன், பேச சக்தியற்ற குரங்கு மனித ஜாதியினின்றும் உற்பத்தியானகாலம் இந்தக்காலத்திலல்ல, இதற்குப்பின்னுள்ள Anthropozoic காலத்தில் என்கிறார்கள்.