பக்கம் எண் :

100
குரங்கினத்திலிருந்து மனுஷன் உற்பத்தியானான் என்பது.

மேற்கண்ட வரிகளைக் கவனிக்கும்போது மனிதன் குரங்கினத்திலிருந்தே உற்பத்தியானான் என்றும் மனுஷர்களுக்கும் குரங்குகளுக்கும் உற்பத்திக்குக் காரணமாயிருந்த ஆதி மூலஸ்தானம் ஒரேவிதமாயிருக்கிறதென்றும் சொல்லுகிறார். அப்படி உற்பத்தியான ஆதிமனுட ஜாதி பழைய உலகத்தில் ஜெனித்ததாகச் சொல்லுகிறார். இப்பழைய உலகம் இந்து சமுத்திரத்தில் இருந்து முழுகிப்போனதாக நாம் நினைக்கும் லெமூரியாக் கண்டமே. இக்கண்டத்தின் இயற்கை அமைப்பிலுள்ள சில செடிகொடிகளையும் மரங்களையுங்கொண்டு அதற்கு சுற்றிலுமுள்ள சில தீவுகளையும் தேசங்களையும் எல்லையாக அவர் சொல்லுவதை நாம் இதன் பின் பார்ப்போம்.

குரங்குகளின் இனத்தில் கிழக்கு தேசங்களில் வசிக்கும் குரங்குகளிலிருந்தே மனிதன் உற்பத்தியாயிருக்க வேண்டுமென்று பின்வரும் வசனங்களில் காணலாம்.

"The Evolution of Man." By Professor Haeckel P. 259.

"The other group, to which man belongs, are the Eopitheca or eastern apes; they are found in Asia and Africa, and were formerly in Europe. All the eastern apes agree with man on the features that are chiefly used in Zoological classification to distinguish between the two Simian groups, especially in the dentition."

"மனித ஜாதியைச் சேர்த்துச் சொல்லும் மற்றொரு வகுப்பு குரங்குகளுக்கு ஈயோபித்தக்கா அல்லது கீழ்தேசத்துக் குரங்குகள் என்று பேர். அவைகள் தற்காலம் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அகப்படும். முற்காலத்தில் அவைகள் ஐரோப்பாவில் இருந்தன. சிமியென் வகுப்பைச் சேர்ந்த இரண்டுவித குரங்குகளின் வித்தியாசத்தையும் மிருக சாஸ்திரத்தில் பிரித்து எழுதும்போது கிழக்கு தேசக் குரங்குகளுக்கும் மனிதருக்கும் அநேக விஷயங்களில், முக்கியமாய் பல் விஷயத்தில், அதிக பொருத்தம் இருக்கிறதாகத் தெரிகிறது."

கிழக்குதேசம் என்று ஆசியாவையும் ஆபிரிக்காவையும் குறிக்கிறார். ஆசியாவின் கரையோரங்களிலும் ஆப்பிரிக்காவின் கரையோரங்களிலும் வசிக்கும் குரங்குகளில் ஒரு வகுப்பே மனித ஜாதி உண்டாகுவதற்குக் காரணமாயிருந்ததென்று தோன்றுகிறது.

"The Evolution of Man" By Professor Haeckel P. 261.

"The apes of the Old World, or all the living or fossil apes of Asia, Africa, and Europe, have the same dentition as man."

"பழைய உலகத்திலுள்ள குரங்குகளும், ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பாக் கண்டங்களில் தற்காலம் இருக்கும் குரங்குகளும், ஒருகாலம் இருந்து அழிந்துபோனதாக கற்களில் பதிந்த ரூபம் மூலமாய் நாம் அறியும் குரங்கு ஜாதிகளும் மனிதனைப் போலொத்த பற்களையுடைத்தாயிருந்தன."

இதில் பழைய உலகத்திலிருந்து அழிந்துபோன குரங்குகள் கற்களின் நடுவில் காணப்படுவதையும் அவ் உருவங்கள் மனிதனைப் போலொத்த பற்களையுடையதாயிருந்தன என்பதையும் தெளிவாகச் சொல்லுகிறார். அவைகளில் அழிந்துபோகாமல் தப்பி மீந்தவை இப்போது எந்தெந்த இடங்களிலிருக்கின்றனவென்று பின்வரும் வசனங்களில் காண்போம்.

"The Evolution of Man" By Professor Haeckel P. 257.

"These living survivors are scattered far over the southern part of the Old World. Most of the species live in Madagascar, some in Sunda Islands, others on the main land of Asia and Africa. Some of these were almost as big as men, such as the diluvial lemurogonon Megaladapis of Madagascar."

"அவைகளில் தப்பி மீந்து உயிரோடிருப்பவைகள் பழைய உலகத்தின் தென்பாகங்களில் அநேக இடங்களில் சிதறுண்டிருக்கின்றன. அந்த ஜாதியில் மிச்சமானவைகள் மதகாஸ்கார் தீவிலும், சில சந்தா தீவுகளிலும், மற்றவை ஆசியா ஆபிரிக்கா கண்டங்களின் தரைபாகங்களிலும் வசிக்கின்றன. இவைகளில் சில