பக்கம் எண் :

கோசர் யார்?111

 

"துணைகா லன்ன புனைதேர்க் கோசர்"

(அகம். 251)

எனவும்

 

"வளங்கெழு கோசர் விளங்குபடை"

(அகம். 205)

எனவும்    

 

 .. ... ... ... ... .... .... .... .... வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
இகலின ரெறிந்த அகலிலை முருக்கிற்
பெருமரக் கம்பம் போல

(புறம். 169)

எனவும்

 

"வலம்புரி கோசர் அவைக்களத் தானும்"

(புறம். 283)

எனவும் 

 

"மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர்'

(அகம். 15)

எனவும்

 

"கோசர் துளுநாட் டன்ன
வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பின்"

(அகம். 15)

எனவும்
     வருவனவெல்லாம், கோசர் தமிழர்க்கு மாறான ஓரியல்பும் உடையரல்லர் எனக் காட்டுதல் காண்க.
     இனி, செங்குட்டுவன் மோகூர்ப் பழையனை வென்று அவன் காவன் மரமாகிய வேம்பின் அடியை வெட்டிய செய்தியைக் கூறும்,

 

"வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து
மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழூஉநிலை யதிர மண்டி
நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்
நிறம்படு குருதி நிலம்படர்ந் தோடி
மழைநாட் புனலின் அவற்பரந் தொழுக
... ... ... ... ... .... .... .... .... .... .... ....
கருஞ்சினை விறல்வேம் பறுத்த குட்டுவன்"

(49)

என்னும் பதிற்றுப்பத்துப் பகுதியுள் வரும்

 

'நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்'

 
என்னும் தொடர்.

 

"இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்"

(குறள். 779)