பக்கம் எண் :

110தமிழியற் கட்டுரைகள்

முள்ளி நாட்டு இளங்கோய்க்குடி (அம்பாசமுத்திரத்தின் பெயர்) என்பது சாசனம் (Top. List. Tinnevelly Dist. Nos. 28, 29 பார்க்க). "இளங்கோ படையரசன் முனையதரன்" (S. I. I. VI. No. 538 of 1909) எனத் தஞ்சையைச் சேர்ந்த கோவலூர்ச் சாசனத்து வருதலான், இக் குடிவழக்குண்மை உணரப்படும். திருநெல்வேலியைச் சார்ந்த கடையம் உள்ள நாடு கோய்நாடு என வழங்கப்படும்." எனப் பெரும்புலவர் ரா. இராகவையங்கார் எழுதி யிருப்பது பொருத்தமே. (கோசர், பக். 54, 55) ஆயின், "கோசர் என்னும் சொல்லே நாளடைவிற் கோளர் என மரீஇயினதென்று நினையலாம்." (கோசர் பக். 57) என்று அவர் தலைகீழாகக் கூறியிருப்பது பொருந்தாது. ளகரம் சகரமாகத் திரிதலன்றிச் சகரம் ளகரமாகத் திரிதலில்லை. தூளி, தூசி என வரு தலும் நினைக" என அவர் எடுத்துக்காட்டியிருப்பதே அதற்குச் சான்றாம்.
     ஆகவே, கோசர் என்று கடைக்கழகச் செய்யுட்களிலும், கோளர் என்று பிற்காலச் செய்யுளிலும், கைக்கோளர் என்று கல்வெட்டுகளிலும், குறிக்கப்பெற்றவர் ஒரேவகுப்பினர் என்று துணியத்தகும். பண்டைச் செய்யுட்களில் கோசர் என்ற வடிவமே காணப்பெறுவதால், அதுவே முந்தினதாகும் என்று ஒருபாலர் கருதலாம். உலக வழக்கு செய்யுள் வழக்கினும் முந்தியதென்றும், செய்யுள் வழக்குச் சொல்லெல்லாம் மூலவடிவத்தைக் காட்டாவென்றும், தெரிந்துகொள்க. நீ என்னும் முன்னிலை யொருமைப்பெயரின் மூலவடிவம் நீன் என்பதே யாயினும், முன்னதே செய்யுள் வழக்காகவும் பின்னது உலக வழக்காகவும் இருத்தல் காண்க.

 

"நன்றல் காலையு நட்பிற் கோடார்
சென்று வழிப்படூஉந் திரிபில் சூழ்ச்சியிற்
... ... ... ... ... ... ... ... ... ... கோசர்"

(அகம். 113)

எனவும்

 

"ஒன்றுமொழிக் கோசர்"

(அகம். 196)

எனவும்    
    

 

"வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
வளங்கெழு கோசர்"

(அகம். 205)

எனவும்

 

"கோசர் நன்மொழி போல வாயாகின்றே"

(குறுந். 15)

எனவும் வருவனவெல்லாம், கோசர் ஒரு பூட்கையை அல்லது கோட் பாட்டை யுடையவரென்றே புலப்படுத்தல் காண்க.    
     இனி,

 

"இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கருங்கட் கோசர்"

(அகம். 90)

எனவும்