என்று
பெண்ணினத்தைப் பழித்த சிவப்பிரகாச அடிகட்கும்
மேல், பெண்ணுடம்பையே பிணக்கழுகுபோற் சின்னபின்னமாகச்
சிதைத்து, இம்மை யின்பத்தை அறவே வெறுப்பவர்போல்
இறைவனை இழித்தும் பழித்தும் அறிவிலியாக்கியுள்ள
சில துறவியருமுளர்.
மற்ற உயிரினங்களைப் போன்றே மக்களினத்தையும்
இறைவனே ஆணும் பெண்ணுமாகப் படைத்து, இனப்பெருக்கத்தை
இன்ப நுகர்ச்சி யொடு இரண்டறப் பிணைத்திருக்கின்றான்.
பெண்ணைப் பழிப்பவர், இறைவனையும் பெற்ற தாயையும்
ஒருங்கே பழிப்பவராவர்.
ஒவ்வொரு மொழியிலும், சிறந்த இலக்கியத்திற்
பெரும்பகுதி பெண்பற்றி யெழுந்ததே. இறைவனுக்கும்
பத்தி முற்றிய அடியானுக்கும் இடைப்பட்ட உறவிற்குக்
காதலன் காதலியுறவே உகந்த உவமமாகின்றது.
தமிழ்ப் பொருளிலக்கணத்தைச் சேர்ந்த அகப்பொருளே
திருக்குறள் இன்பத்துப்பாலிற்கு அடிப்படையாயினும்,
திருக்குறள் அறநூலாதலின், இன்பமொன்றே நோக்கிய
இலக்கணநூல் போலாது, அறமும் இன்பமும் ஒருங்கே
நோக்கிய ஒருவகைத் தனிக்கோவைப் பாடலே திருவள்ளுவர்
இன்பத்துப்பால் என்பதை அறிதல் வேண்டும்.
ஆகவே, இலக்கண அகப்பொருளிற் போல்
முன்பின்னாக மணக்கப்படும் பல தலைவியரும்,
இடையிடை தொடர்புகொள்ளும் பரத்தையரும், திருவள்ளுவர்
இன்பத்துப்பாலில் இல்லவேயில்லை என்பது
வெளிப்படை. பொருட்பாலில் உள்ள "பிறனில்
விழையாமை", "வரைவின் மகளிர்" என்னும் அதிகாரங்களும்
இதை ஐயந்திரிபற வலியுறுத்தும். எனவே, ஒரே கற்புக்
காதலனும் ஒரே கற்புக்காதலியும் முதலிலிருந்து
முடிவுவரை நுகரும் காமத்துக் காழில் கனியான
ஈடிணையற்ற பேரின் பமே, திருவள்ளுவர் இன்பத்துப்பாற்
பொருள் என்று தெளிக. இவ் வகையில் இது பரத்தையிற்
பிரிவு கூறும் திருச்சிற்றம்பலக்கோவை யினும்
மிகச் சிறந்ததாகும்.
"அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்"
என்று மாமூல னாரும், "இன்பம் பொருளறம்
வீடென்னு மிந்நான்கும்" என்று நரிவெரூ உத்
தலையாரும், இன்பத்
திறமிரு பத்தைந்தால்"
என்று மதுரைப் பெருமருதனாரும், "இன்பு
சிறந்த நெய்"
என்று நப்பாலத்தனாரும், "இன்பின் திறனறிந்தேம்"
என்று கொடிஞாழன் மாணிபூதனாரும். திருவள்ளுவ
மாலையிற் பாடியிருப்பதால், இன்பத்துப்பால்
என்றே ஆசிரியராற் பெயரிடப்பட்டிருந்து
பின்னர்க் காமத்துப்பால் என்று சிலரால்
மாற்றப்பட்டுப் பரிமேலழகராலும் தழுவப்பட்டிருத்தல்
வேண்டும்.
காமத்துப்பால் என்ற பெயரைக் கண்டவுடன் அப்பால்
வாற் சாயனர் காமசூத்திரத்தைத் தழுவியதென்று
கொண்டுவிட்டார், தமிழைக் காட்டிக் கொடுப்பதிலேயே
கண்ணுங் கருத்துமாயிருந்த வையாபுரி பிள்ளை.
காதலின்பத்தையும் அறத்தையுங் கடுகளவுங்
கருதாது புணர்ச்சி வினையே |