சிறந்த
பொருளாகக் கொண்டு, பொதுமகளிரொடும் பிறர்
மனைவிய ரொடும் புணரும் பெருந்திணைக் காமத்தைக்
கூறும் பரத்தை நூல் (pornography) தெய்வக்
காதலைக் கூறும் திருக்குறள் இன்பத்துப்
பாலினின்று பெரிதும் வேறுபட்டதாகும்.
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருட்
பாகுபாடு பற்றி இன்பத்துப்பால் என்றொரு தனிப்
பகுதியில் இன்பம் பிரித்துக் கூறப்பட்டிருப்பினும்,
உண்மையில் அது அறத்துப்பாலில் இல்லறவிய
லொடு இணைந்ததே. இவ் வுலகில் தலையான இன்பம்
பெண்ணின்பம். அது இல்வாழ்வான் தன்
வாழ்க்கைத் துணையான மனைவியிடம் பெறுவது.
அறம் செய்து இல்வாழும் வாழ்க்கை இல்லறம்.
அதற்கு இன்றியமையாத நிலையான துணை மனைவி.
ஆகவே, அறப்பயனும் இன்பமும் ஒரே வாழ்க்கை நிலையிற்
பெறப்படுகின்றன. நிலையான காதன் மனைவியிடம்
பெறும் இன்பமே உண்மையானது; சிறந்தது. நிலையில்லாத
காதலற்ற பொது மகளிர் தரும் இன்பம்
பொய்யானது; இழிந்தது. அதனால்,
"பொருட்பெண்டிர்ர்
பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று" (913)
என்றார்
திருவள்ளுவர்,
இறைவனால் இணைக்கப்பெற்ற கற்புடைக் கணவனும்
மனைவி யும் காதலொடும் மனத் தூய்மையொடும்
அறஞ் செய்து வாழும் தெய்வத் தன்மையான இல்லறம்,
துறவறத்தினும் நல்லறம் என்பது, திருவள்ளுவராலும்
பிறராலும் முடிந்த முடிபாகத் தீர்க்கப்பட்ட
தீர்ப்பாத
லால், திருவள்ளுவரின் இன்பத்துப்பாலை இகழ்பவர்
இறைவன் ஏற் பாட்டை இம்மியும் அறியாதவரேயாவர்.
ஆகவே, பேரின்ப நுகர்ச்சியை அல்லகூறி (Allegory)
போல் உவமையாகக் காட்டும், இன்பத்துப்பால்,
மறைநூலின் பாற்படுமேயன்றி வடவர் காமநூலாகாது.
7.
சொற்றிறன் முற்றுங் கற்றவர்
திருவள்ளுவர், ஒரு தமிழ்ப் பேரகரமுதலித் தொகுப்பாசிரியர்
போல் தமிழ்ச் சொற்றொகுதி யனைத்தையும்
அறிந்தவர்; தொல்காப்பி யத்தினுஞ் சிறந்த
மூவதிகார முற்றிலக்கண நூலாசிரியர்போல்,
தலை சிறந்த இலக்கணப் புலமை வாய்ந்தவர்; இக்காலச்
சொல்லாராய்ச்சியாளர் போல் சொற்களின்
அமைப்பையும் பல்வேறு வடிவங்களையும் அவற்
றின் சிறப்புப் பொருள்களையும் ஆய்ந்தவர்;
ஓரளவு புதுச் சொற்களை யும் புனைந்தவர். அவர்
கூற்றுகளினின்று பின்வருமாறு அவர் சொல் லியல்பையும்
சொல் வன்மையையும் உய்த்துணரலாம். என்றும்
அகன மர்ந்தும் முகனமர்ந்தும் இன்சொற்
சொல்பவர் (92), ஒருபோதும் பயனில சொல்லாதவர்
(190-200), கேட்பாரை வயப்படுத்திப் பகைவரும்
விரும்பு மாறு சொல்பவர் (643), தன் சொல்லை வெல்லுஞ்
சொல் இல்லாதவாறு சொல்பவர் (645), சோராதும் |