எவருக்கும்
அஞ்சாதும் சொல்பவர் (647), கோவைபட இனிது
சொல்பவர் (648), பொருள்பெருக்கிச்
சொற்சுருக்கிச் சொல்பவர் (649), பிறர்க்குத்
தெளிவாக விளங்கச் சொல்பவர் (650), அவையறிந்து
சொல்லின் தொகை யறிந்து சொல்லுந் தூய்மையர்
(711), வேளையறிந்து நன்குணர்ந்து சொல்பவர்
(712), நுண்ணறிஞர்முன் நுண்ணறிஞராயும் புல்லறிஞர்
முன் புல்லறிஞர் போன்றும் சொல்பவர் (714),
அறிவால் மூத்தோர்முன் முந்திச் சொல்லாதவர்
(715), அறியும் ஆற்றல் இல்லாதவரிடை ஒன்றுஞ்
சொல்லாதவர் (719).
இனி, குறியெதிர்ப்பை (221), வைப்புழி (226), நெடுநீர்ர்
மறவி மடிதுயில் (605) என்னுஞ் சொற்களால், அவரது
தகுந்த சொல்லை யாளுந் திறமும் அறியப்படும்.
திருக்குறட்
சிறப்பியல்கள்
திருவள்ளுவரின் சிறப்பியல்களைக் கூறியது
போன்றே, திருக் குறளின் சிறப்பியல்கள் சிலவற்றையும்
சிறப்பாகக் கண்டு கூறியுள்ளார் திரு. மகராசனார்.
இவற்றுட் சில ஏனையோராலும் ஏற்கெனவே கூறப்
பட்டிருப்பினும், அவற்றைத் தெளிவாக
விளக்கியும் திறம்பட வலியுறுத்தி யும் கூறியிருப்பது
புதுச்சிறப்பாகும்.
1.
ஒப்புயர்வற்றது
பல மதங்கட்குரிய மறைநூல்கள் அவ்வம் மதத்தார்க்குத்
தலை சிறந்தனவேனும், நாடு இன குல மத கட்சிச்
சார்பற்று மன்பதை முழு வதற்கும் பொதுவான உயரிய
நாற்பொருண் மறைநூல் திருக்குறளே யென்பது, எல்லார்க்கும்
ஒப்ப முடிந்ததொன்றே.
ஆய்ந்து பாராது ஆரியத்தையேற்றுத் தம்மையும்
தம் குடிகளையும் அடிமைப்படுத்தி,
"ஆய்ந்தாய்ந்து
கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம்
தரும்"
(792)
என்னும்
குறட் கிலக்கியமாகிய மூவேந்தரின் பேதைமைச்
செயலால், வேதம் தேவமொழி யென்றும் வேதியன்
நிலத்தேவன் என்றும் வழங்கி வரும் (அல்லது வந்த)
கூற்று, கூற்றாகித் தமிழரின் மதியைக் கொன்று
விட்டதனால்,
"அறமுப்பத்
தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தாற்
றெளிய - முறைமையால்
வேத
விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதவழுக் கற்ற
துலகு."
"நான்மறையின்
மெய்ப்பொருளை முப்பொருளா
நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்
சிந்திக்க கேட்க செவி." |