பக்கம் எண் :

60பாவாணர் நோக்கில் பெருமக்கள

"சாற்றிய பல்கலையுந் தப்பா அருமறையும்
போற்றி யுரைத்த பொருளெல்லாம் - தோற்றவே
முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினு மில்."

"ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு."

"ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது
தந்தா னுலகிற்குத் தான்வன் ளுவனாகி
அந்தா மரைமே லயன்."

"எப்பொருளும் யாரும் இயல்பி னறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செய்பவரும் - முப்பாற்குப்
பார தஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்."

"ஏதமில் வள்ளுவர் இன்குறள்வெண் பாவினால்
ஓதிய ஒண்பொரு ளெல்லாம் - உரைத்ததனால்
தாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன."

"இன்பம் பொருளறம் வீடென்னும் இந்நான்கும்
முன்பறியச் சொன்ன முதுமொழிநூல் - மன்பதைகட்
குள்ள அரிதென் றவைவள் ளுவருலகங்
கொள்ள மொழிந்தார் குறள்."

"வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழா லுரைசெய்தார் - ஆதலால்
உள்ளுந ருள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு."

"ஒருவ ரிருகுறளே முப்பாலி னோதுந்
தரும் முதனான்குஞ் சாலும் - அருமறைகள்
ஐந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்."

"சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள்வெண் பா."