பக்கம் எண் :

20கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

     முதற் பத்தெண்ணுப் பெயர்களும் பகிர்வுப் பொருளில் இரட்டிக்கும்போது, ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நந்நான்கு, அவ்வைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ்வெட்டு, ஒவ்வொன்பது, பப்பத்து எனப் புணரும். ஒன்றொன்றாய், இரண்டிரண்டாய் என்பதினும் ஒவ்வொன்றாய், இவ்விரண்டாய் என்பது சாலச் சிறந்ததாகும் . வெவ்வேறு பப்பாதி என்பனவும் இங்ஙனமே.
 

மெய்யீற்றுப் புணர்ச்சி
 

     மெய்யெழுத்துகள் உயிரோடு கூடின் உயிர்மெய்யாகும். இது இயல்பு புணர்ச்சியே.
     

உ-ம்: போய் + இருக்கிறான் = போயிருக்கிறான்
 

     தனிக்குறிலையடுத்த மெய்கள் உயிரோடு கூடின் இரட்டிக்கும். இது விகாரப் புணர்ச்சியாம்.
 

     உ-ம்: பொய் + உரைத்தான் = பொய்யுரைத்தான்.
        போய்யிருக்கிறான் என்பது தவறு.


ண்,ம்,ல்,ள்,ன் என்ற மெய்கள்
     ண், ம், ல், ள், ன் என்ற மெய்கள் வல்லினத்தோடு புணரின், இருவழியிலும் பெரும்பாலும் பின்வருமாறு திரியும்.

 

 எழுத்து

  திரிபு

 உதாரணம்

1.

ண்

ட்

மண் +கலம் = மட்கலம்      

2

ம்

ங்

மரம் + குறிது = மரங்குறிது

 

ஞ்

மரம் + சிறிது = மரஞ்சிறிது

 

ந்

மரம் + தழைக்கும் = மரந்தழைக்கும்

3

ல்

ற்

கல் + பலகை = கற்பலகை

4

ள்

ட்

கள் + குடம் = கட்குடம்

5

ன்

ற்

பொன்+ பணி = பொற்பணி

       ண்,ள் என்னும் மெய்கள் தகரத்தொடு புணர்ந்து டகரமாகும் போது, அத் தகரமும் டகரமாகும்.


     உ-ம்: மண் + தாழி = மட்டாழி
       முள் + தாழை = முட்டாழை
       மட்தாழி, முட்தாழை என்று எழுதுவது தவறு.
 

     ல்,ன் என்னும் பெயர்கள் தகரத்தோடும் புணர்ந்து றகரமாகும் போது அத் தகரமும் றகரமாகும்.
 

     உ-ம்:  கல் + தாழை = கற்றாழை
        பொன் + தோடு = பொற்றோடு
        கற்தாழை, பொற்தோடு என்றெழுதுவது தவறு.