பகு - பஜ் (bh)
- இ. வே.
பகு
- பக்கு = பிளவு, பை. பக்கு - பக்கம் = பகுதி, புறம், ஏட்டுப்
புறம். பக்கம் - பக்கல்.
பக்கு-பாக்கு
= பகுதி. பாக்கு - பாக்கம் = பட்டினப் பகுதி.
பாக்கு
- பாக்கை = பாக்கம், ஊர், நகரப் பகுதி.
பகு-பகல்
= நாட்பகுதி, நடுப்பகுதி. பகல் - பால் = வகுப்பு, பிரிவு,
பகல் - பகர் = ஒளி.
பகு
- பகவு = பிளவு, பகிர்வு. பகவு - பகவன் = பகிர்ந்தளிப்பவன்,
படியளப்பவன், ஆண்டவன்.
பகு
- பகிர்.
பகு-பகுப்பு.
பகு-பகுதி - பாதி. பகு - பகை. பகுதி - பஃதி.
பகு
- பங்கு - பங்கி = பங்குள்ளது.
பங்கு
- பாங்கு = பான்மை. பாங்கு - பாங்கர் = பக்கம்.
பாங்கு
- பாங்கன் = பக்கத்திலிருப்பவன், தோழன்.
பகு
- பா. பகு - பாகு = பகுதி, பக்கம், பாகன்,
பாகு-பாகன்=யானைப்
பக்கத்திலிருந்து அதை நடத்துபவன்.
பாகு
- பாகம். பாகு - பாகி = பாகமுள்ளது.
பாகு
- பாகை = பகுதி, வரைப்பகுதி
பா
- பாது = பொருட் பங்கு. பாதீடு = பங்கீடு.
பா-பாத்தி
= பகுதி, பயிரிடும் செய்ப்பகுதி. பாத்தி - பத்தி = பாத்தி,
பகுதி, கட்டுரை கடிதம் முதலியவற்றின் தனிப்பகுதி
(para).
பத்தி
- பந்தி = கூடியிருந்துண்பார் பகுதி, உண்பார் வரிசை.
பகு-வகு-வக்கு=வழிவகை.
வக்கு-வாக்கு=பக்கம், திசை.
காற்று
வாக்கு = காற்றுப் பக்கம் அல்லது திசை.
வகு-வகிர்.
வகிர்தல் = பிளத்தல். வகிர் - வகிடு = தலைமயிர் உச்சி
வகிர்வு.
வகு-வகுதி
= வகுப்பு. வகு-வகுப்பு. வகு-வகுந்து = வகுத்த வழி.
வகு
- வகை = வேறுபட்ட வகுப்பு, வழிவகை.
வகு
- வாகு = பக்கம், திசை.
பஞ்சி-பஞ்சி
பைம்மை
= பசுமை, இளமை, மென்மை, நொய்ம்மை.
|