பக்கம் எண் :

24வடமொழி வரலாறு

     நுகக்கோல் என்பது இன்று பாண்டிநாட்டில் முகக்கோல் என்று
திரிந்து வழங்குகின்றது. மோக்கால் என்பது அதன் கொச்சை வடிவம்.*

     உயிர்முதற் சொற்கள் நகரமெய்ம் முதலாவது இயல்பே.

     எ-டு: இமை-நிமை, உந்து-நுந்து, ஊன்-நூன்-நீன்.

      ஊக்கு-நூக்கு.

உ-யு2 (இ. வே.)

     உக. உகு-யுஜ் (இ.வே). ஒ.நோ: பகு-பஜ(bh), புகு-புஜ் (bh).
உத்தி-யுக்தி

     உகம் - யுக (g)

நுந்து - நுத் (d) - இ. வே.

     உந்துதல் = முன் தள்ளுதல், தள்ளுதல்.

     உந்து - நுந்து. நுந்துதல் = முன் தள்ளுதல், தள்ளுதல், தூண்டுதல்.

நேயம்-ஸ்நேக

     நெள் - நெய் - நே = 1. அன்பு.

     2.ஈரம். 'நேஎ நெஞ்சின்' (புறம். 3).

     நே - நேயம் = 1. நெய், 2. எண்ணெய். 3. அன்பு.

"நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்து”
(திருக்கோ. 39)

     4. கடவுட்பற்று.

"நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி"
(திருவாச. 1 : 13).

     நேயம்-நேசம்-நேசன்.

     வடவர் காட்டும் ஸ்நிஹ் (ஒட்டு) என்னும் மூலம், நெய் என்னும்
தென்சொற்றிரிபே.

பக்கம் - பக்ஷ (இ. வே.)

     பங்கு - பங்க (bhanga)

     பகவன் - பகவன் (bhagavan).

     பாகம் - பாக (bhaga)


     நுகத்தடி - மோத்தடி என்றும், நுகழ்ழி - மோக்கழி என்றும்
சேரணாட்டில் திரிந்து வழங்குகிறது. - பதிப்பாசிரியர்