பக்கம் எண் :

மொழியதிகாரம்23

"கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்"
(சிலப். 10: 116)

"கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே"
(சிலப் . 17: 126)

"நீலித ழுண்கண்ணாய்"
(கலித். 33: 28)

"நீனிற மஞ்ஞையும்"
(சிலப். 12: 34)

     நீல்-நீலம் = நீலநிறம், நீலச்சாயம், நீலமணி, கருப்பு, கருங்
குவளை, நீலமலை.

     நீலன் = காரி (சனி). நீலி = காளி, அவுரி.

     நீலக்கடம்பை, நீலக்காலி, நீலச்சம்பா, நீலச்சுறா, நீலநாரை,
நீலமுள்ளி முதலிய எத்துணையோ நீலப்பொருட் பெயர்கள்
தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன.

நுகம் - யுக (g) - இ.வே.

     உத்தல் - பொருந்துதல். உத்தி = 1. விளையாட்டிற் கன்னை
(கட்சி) பிரித்தற்கு இவ்விருவராய் இணைதல்.

     உத்திகட்டுதல் என்பது வழக்கு. தெ. உத்தி (dd).

     2. நூலுரைகட்குப் பொருந்தும் நெறிமுறை.

"ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகைய தாகி
ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின்
முப்பத் திருவகை உத்தியொடு புணரின்
நூல்என மொழிப நுணங்குமொழிப் புலவர்."
(தொல். 1598)

     தொல்காப்பியம் கி.மு.7ஆம் நூற்றாண்டினதான வழிநூலே யாயினும்,
ஏனை மொழியிலக்கண நூல்கட்கெல்லாம் மிக முந்தியதாம்.

     உ- உக-உகம் = இணை, நுகம்.

     உகம் - நுகம் = ஏரிலும் வண்டியிலும் காளைகளைப் பூட்டும் மரம்.

"எருதே யிளைய நுகமுண ராவே"
(புறம்.102)

     ம. நுகம், க. நொக (g).