நிலையம்-நிலய
நில்-நிலை-நிலையம்
= 1. நிற்குமிடம், தங்குமிடம், இருப்பிடம்.
"நியாயமத்
தனைக்குமோர் நிலைய மாயினான்" |
(கம்பரா.
கிளை. 55)
2.கோயில்.
|
|
|
"நல்லூரகத்தே
திண்ணிலையங் கொண்டு நின்றான்" |
(தேவா. 414: 5 ), (திவா.)
|
'அம்'
ஒரு பெருமைப்பொருட் பின்னொட்டு.
நிலை=நிற்கும்
சிற்றிடம் (stand). எ-டு: கதவுநிலை, தேர்நிலை.
நிலையம்-நிற்கும்
பேரிடம் (station). எ-டு: புகைவண்டி நிலையம்.
வடவர்
நி + லய என்று பகுத்து, ஒன்று இன்னொன்றோடு ஒன்றிவிடும்
இடம் என மூலப் பொருள் கூறுவர்.
நி = கீழ். லீ = ஒட்டு. லீ-லய = ஒட்டுகை. நிலீ = கீழ்த் தங்கு,
படிந்திரு. நிலைத்திரு. நிலய = தங்கிடம், இருக்கை, குடியிருப்பு, குகை, கூடு.
தென்சொல்லை
வடசொல்லாகக் காட்ட வேண்டி, அதை வடவர்
செயற்கை முறையிற் சிதைப்பதற்கு இஃதோர் எடுத்துக் காட்டாம்.
தம் கொள்கையை நிறுவவே, நிலையம் என்னும் சொல் வருமிடமெல்லாம்
நிலயம் என்றே எழுதுவர், அல்லது பதிப்பிப்பர்.
நீரம்-நீர
நீள்
- நீர் = நீளும் பொருள். நீர் x நிலம். நில்-நிலம் = நிற்கும்
பொருள்.
நீர்
- நீரம் - ஈரம். நீர் - ஈர். ஈர்மை = தண்மை. எ-டு: ஈர்ங்கதிர்,
ஈர்ங் கை.
நீலம்-நீல
நீர்-நீல்
= நீலம்.
நீர்நிலைகட்குள்
கடலே பெரிதாகவும் ஏனையவற்றிற் கெல்லாம்
மூலமாகவு மிருப்பதால், நீர் என்னும் சொல் சிறப்பாகக் கடலையே
குறிக்கும்.
"நீரொலித்
தன்ன நிலவுவேற் றானை" |
(மதுரைக்.
369)
|
கடல்நிறம்
நீலமா யிருப்பதால், நீர் என்னும் சொல்லினின்று
நீலக்கருத்தும் நீல் என்னும் சொல்லும் பிறந்தன.
|