|
"உலந்தரு
வயிரத் திண்டோள்" (கம்பரா.பூக்கோ.10).
2.வலிமை.
"தோள்வயிரந் தோன்ற" (சீவக.645).
3.
மரவயிரம் (பிங்.). 4. தொண்மணியுள் ஒன்று.
"வயிரப்
பொற்றோடு" (சிலப். 29, செங்குட்டுவன் கூற்று).
5.
மனவயிரமாகிய செற்றம்.
வடமொழியில்
இதற்கு மூலமில்லை.
"Another
vuj or uj, ‘to be hard or strong‘ may be inferred
from ugra, ojas, vjra,
vja,
(qq. vv.) the last of which gave
rise to the Nom. vjaya"
என்று மா. வி. அ. குறித்திருப்பதை நோக்குக.
வரால்-முரல
வரி
= நீளம்; வரி-வரால் = குறவையினும் நீண்டிருப்பது E. murrel.
முர்(சூழ்,
பின்னு, பிணை) என்பது மூலமாயிருக்கலாமென்று,
மா.வி.அ.
கருதுவது சரியன்று.
வரி-வ்ரீறி
(அ.வே.)
வரி
= வரிச்சம்பா, வரியுள்ள நெல், நெல் (பிங்.).
"எடுத்துவரி
முறத்தினி லிட்டு" (தனிப்பாடல்).
மா.வி.அ.
"of doubtful derivation" என்று குறித்திருத்தல் காண்க.
வல்-வல்
வல்-வல.
வலத்தல் = 1. வளைத்தல். 2. சூழ்தல்.
"இழைவலந்த"
(புறம். 136). 3. சுற்றுதல்.
"நெடுங்கொடி...வாங்குசினை
வலக்கும்" (புறம். 52).
வலந்தம்
= வளைவு.
வலம்-பல (d) -
(இ.வே.)
L.
valere, be strong
வகரம்
பகரமாய்த் திரிந்துள்ளது வடமொழியின் பின்மையைக் காட்டும்.
வள்ளி-வல்லி
வள்-வள்ளி
= வளைந்த கொடிபோன்ற பெண், குறிஞ்சிநிலப் பெண்,
முருகன் தேவி.
ஒ.நோ:
கொடு-கொடி = வளைந்த தண்டு. கொடி- கொடிச்சி =
குறிஞ்சிநிலப்
பெண்.
|