| நூல்: | ‘செவ்வலூர் மதுரைநாயகி அம்மை மீது பதிற்றுப்பத்தந்தாதி; சிங்கப்பூர் பிரபந்தத் திரட்டு. |
சிங்கப்பூர் பிரபந்தத் திரட்டு: இந்நூலில் சிங்கப்பூர் சித்தி விநாயகர் நவமணிமாலை, சுப்பிரமணியசாமி பிள்ளைத் தமிழ், சண்முக மாலை, சுப்பிரமணியர் பதிகம், அங்கயற்கண்ணி மாலை, சுந்தரேசர் திருவிரட்டை மணிமாலை, அநுகூல விநாயகர் மாலை. அநுகூல விநாயகர் பதிகம் என்ற சிறுநூல்கள் அடங்கியுள்ளன. மையோடக் கோவனார் (சங்ககாலம்) இவர் பரிபாடல் பாடிய புலவர்களுள் ஒருவர். புனல் விளையாட்டிற்குத் துணை செய்யும் ஓடத்தைப் புனைந்து கூறியது பற்றி இப்பெயர் பெற்றார் என்று ஒரு கருத்து உண்டு. இவர் வையையின் வெள்ளப் பெருக்கினையும், அவ்வையைக்குரிய பாண்டிவேந்தரின் படைச் சிறப்பினையும் பலவாறாகப் புகழ்ந்து கூறியிருப்பதனால் பாண்டி நாட்டவர் என்றும், பாண்டியன்பால் பேரீடுபாடு உடையவர் என்றும் கருதப்படுகின்றார். இப்பாடல் வையை பற்றியது. மோசிக் கரையனார் (சங்ககாலம்) இவர் பிறந்த ஊர் மோசி அல்ல என்றும் மோசிக்கரை என்பதே ஓர் ஊர் என்றும் ஒரு கருத்து உண்டு.
|