பக்கம் எண் :

181

மோசி கண்ணத்தனார்                                 (சங்ககாலம்)

ஊர்:மோசி.

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பிறந்த மோசி என்ற ஊர் சங்ககாலப் புலவர் பலருக்கு இருப்பிடமாக அமைந்தது. இவ்வூர் திருப்புவனங் கோட்டத்திலுள்ள மோசிப்பட்டியாகவோ பரமக்குடிக் கோட்டத்திலுள்ள மோசிகுடியாகவோ இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

நூல்:நற்றிணை 124.

மோசி கீரனார்                                      (சங்ககாலம்)

ஊர்:மோசி.

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். படுமரத்து மோசிகீரனார் அல்லது படுமாற்றூர் மோசிகீரனார் என்ற புலவரும், இவரும் வேறு வேறானவர் என்றும் ஒரே புலவர் என்றும், வேறான கருத்துக்கள் உள்ளன. இப்புலவர் அரசனுடைய முரசுகட்டிலில் துயின்றும் அது முரசுகட்டிலென அறியாது துயின்றதனால் தம்மைக் கொல்லாது விட்ட தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறையைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் பாராட்டி உள்ளனர்.

நூல்:

அகம் 392; குறுந்தொகை 59, 84; நற்றிணை 342; புறம்: 50, 154, 155, 156, 186.

மோசி கொற்றன்                                    (சங்ககாலம்)

ஊர்:மோசி.

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர்.

நூல்:குறுந்தொகை 377.