பக்கம் எண் :

மோசி சாத்தனார்

மோசி சாத்தனார்                                   (சங்ககாலம்)

ஊர்:மோசி.

இவர் இயற்பெயர் சாத்தனார் என்பது.

நூல்:புறம் 272.

மோசே (19-நூ)

நூல்:விசுவாச பத்தி (1844).

மோதாசனார்                                       (சங்ககாலம்)

நூல்:குறுந்தொகை 229.

மௌனாநந்த சாமிகள் (20-நூ)

நூல்:

இராமா நந்தசாமிகள் நிச்சல என்பவர் இயற்றிய நூல்களைப் பாராட்டி வழங்கிய சிறப்புப் பாயிரம்.

மௌனகுரு அடிகள் ( )

ஊர்:மதுரை மாவட்டம் பெரியகுளம்.
நூல்:மௌனமணிக் கோவை.

இந்நூலுக்கு மெய்ஞ்ஞான அநுபூதிரசம் என்ற பெயரும் உண்டு. இந்நூலில் 3222 செய்யுட்கள் உள்ளன.

மௌனகுரு ருத்திரமூர்த்தி ஆசாரியார் (19-நூ)

நூல்:

அமணேசுவரக்கடவுள் பதிகம் (1877), பழநி சிவசுப்பிரமணியக்கடவுள் பேரில் சில கவித்திரட்டு (1879).

முதல் நூல் இரட்டை ஆசிரிய விருத்தத்தாலாகிய பதிகப், பாமாலை; 10 செய்யுட்களை உடையது.