இரண்டாவது நூலில் மாதப் பாட்டும், வாரப் பாட்டும், ஆனந்தக் களிப்பும் அடங்கியுள்ளன. மாதப் பாட்டில் சித்திரை தொடங்கி 12 திங்களுக்கு 12 பாட்டும் வாரப் பாட்டில் ஆதிவாரம் தொடங்கி ஏழுநாட்களுக்கு 7 பாட்டும் ஆனந்தக் களிப்பில் 10 பாட்டும் ஆக 29 பாடல்கள் உள்ளன. மௌனகுரு ருத்திரமூர்த்தி, வே (19-நூ) | ஊர்: | மதுரை மாவட்டம் பழநி. | | தந்தை: | வேலாச்சாரி. | | மறைவு: | கி.பி. 1883. | | நூல்: | அமணேஸ்வரக் கடவுள் பதிகம், பழநி சிவசுப்பிரமணியக்கடவுள் பேரில் சில கவித்திரட்டு; பழனியாண்டவர் மீது இசைப் பாடல்கள். |
மௌன சாமிகள், த (19-நூ) | ஊர்: | திருப்பேரூர். | | நூல்: | கொலைமறுத்தல் (1895), திருவருட்பா. |
கொலைமறுத்தல் என்ற நூலுக்கு கிருத்துவங் கொண்ட குருட்டு மத கண்டனம் என்ற பெயரும் உண்டு. இந்து தெய்வங்களை இகழ்ந்து கூறியவர்களுக்கு உண்மை எடுத்தியம்புவதாகவும் உள்ளது. வடக்குத் திருவீதிப் பிள்ளை (12-நூ) | வே.பெ: | திராவிட வேதாந்த தேசிகர். | | ஊர்: | திருவரங்கம். |
இவர் நம்பிள்ளையின் மாணவர். ஈடு முப்பத்தாறாயிரப்படி என்னும் வியாக்கியானத்தை எழுதியவர். அஷ்டாதச ரகசியத்தை அருளிச்செய்த பிள்ளை லோகாசிரியருக்கும் ஆசாரிய ஹிருதயம் அருளிச் செய்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்கும் தந்தையார் ஆவர். | நூல்: | ஈடு முப்பத்தாறாயிரப்படி. |
|