வடநெடுந்தத்தனார் (சங்ககாலம்) இவர் பெயர் வடமநெடுந்தச்சனார் எனவும், வடமநெடுந்தத்தனார் எனவும் திரித்து வழங்கப்படுகின்றது. வட நாட்டினின்றும் தென்னாட்டிற்கு குடிபுகுந்த பழங்குடியில் தோன்றியது பற்றி நெடுந்தத்தனார் என்ற இயற்பெயருடைய இவர் வடநெடுந்தத்தனார் என்று அழைக்கப்படுகின்றார். வடமலையப்ப பிள்ளை (18-நூ) | ஊர்: | சோழ நாட்டில் இரசை; கார் காத்த வேளாளர். |
இவரைப் பற்றிய வரலாற்றினை அறிந்து கொள்ள மச்ச புராண முகவுரையில் எஸ். அநவரத வினாயகம் பிள்ளை எழுதிய குறிப்புக்களே துணை செய்கின்றன. இவர் இளமையில் பெற்றோரை இழந்து நாயக்கமன்னர் குலகுருவாகிய தாதா சாரியர் என்பவரால் வளர்க்கப் பெற்றுக் கல்வி கற்றார். பின்னர் நாயக்கர் ஆட்சியில் ஓர் அலுவலில் அமர்ந்து திருநெல்வேலியில் நாயக்கமன்னர் பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்தினார். நாயக்கர்களில் சொக்கநாத நாயக்கர் காலத்தும், அவர் மனைவி மங்கம்மா காலத்தும், விசயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தும் பிரதிநிதியாக இருந்ததால் பதினெட்டாம் நூற்றாண்டினர் ஆவர். திருச்செந்தூர் தலபுராண ஆசிரியர் வெற்றி மாலைக் கவிராசர் என்பவர் தாம் இயற்றிய கும்மியொன்றில், இவர் கடலில் கிடந்த ஆறுமுகக் கடவுளின் திருஉருவத்தையெடுத்துத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிரதிட்டை செய்தார் என்று குறிப்பிட்டு உள்ளார். | நூல்: | மச்சபுராணம், நீடுர்த்தலபுராணம். |
மச்சபுராணம், 5000 செய்யுட்களை உடையது. நாநூற்றுக் கோவை, நாற்கவி வண்ணம் முதலியன இவர் பாடியனவென்று புலவராற்றுப்படை ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
|