வடமவண்ணக்கன் தாமோதரன் (சங்ககாலம்) இவர் பெயர் வடமன்தாமோதரனார் எனவும் காணப்பெறுகின்றது. வடமன்னென்பது வடக்கிருந்து வந்த மரபினர் என்று பொருள்படும். வண்ணக்கன் நாணய சோதனை செய்பவனாவான். வண்ணக்கனை கோட்டக்காரன் என்று கூறுவதுமுண்டு. புறநானூற்றில் இவர் பிட்டங்கொற்றனைப் பாடியுள்ளார். | நூல்: | குறுந்தொகை 85; புறம் 172. |
வடமோதங்கிழார் தொண்டை நாட்டில் சித்தூர் மாவட்டத்தில் சீகாளத்தி திருத்தணிகை வட்டங்களில் மாதம் என்று ஓர் ஊர் உள்ளது. இவ்வூர் பண்டை நாளில் மோதம் என வழங்கியதாக அரசியல் ஏடுகள் தெரிவிக்கின்றன. மதுரை மாவட்டத்திலும் மோதம் என்று ஓர் ஊர் உள்ளது. ஆதலின் சித்தூர் மாவட்டத்திலுள்ள மோதம் வடமோதம் என வழங்கப்பட்டது. இவ்வடமோதமே புலவருக்குரிய ஊர் என்பர். | நூல்: | அகம் 317; புறம் 260. |
வடிவேலு முதலியார் - 1 (19-நூ) | ஊர்: | திருக்கழுக்குன்றம். | | நூல்: | சூரபத்ம நாடகம். |
வடிவேலு முதலியார் - 2 (19-நூ) இவர் சொர்க்கபுரம் இராமலிங்கத் தம்பிரானிடம் கல்வி கற்றுப் புலமை அடைந்தார். | நூல்: | ‘முருகக் கடவுள் மீது திருப்படை வீட்டு வண்ணப்பா, குமரேச அட்டகம்’, முருகன் நேரிசை வெண்பா, முருகன் தோத்திரப்பா. |
|