|
2165.அத்தகைமை பிள்ளையா ரருளிச் செய்ய |
வந்தணர்க ளருடலைமேற் கொண்டு தாழ்ந்து |
சித்தமகிழ் வொடுசிறப்பத், தாமுந் தெய்வத் |
திருத்தோணி யமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து |
மெய்த்தவிசைப் பதிகங்கள் கொண்டு போற்றி |
விரைமலர்த்தாள் மனங்கொண்டு மீண்டு போந்து |
பத்தருட னினிதமரும் பண்பு கூடப் |
பரமர்தாள் பணிந்தேத்திப் பயிலு நாளில். |
267 |
வேறு |
2166.பந்தணை மெல்விர லாளும் பரமரும் பாய்விடை மீது |
வந்துபொன் வள்ளத் தளித்த வரம்பின்ஞா னத்ததுமு துண்ட |
செந்தமிழ் ஞானசம் பந்தர் திறங்கேட் டிறைஞ்சுதற் காக |
அந்தணர் பூந்தராய் தன்னி லணைந்தனர் நாவுக் கரசர். |
268 |
2165. (இ-ள்.) அத்தகைமை.......அருளிச் செய்ய - அத்தன்மை பிள்ளையார் அருளிச் செய்யவே; அந்தணர்கள்......சிறப்ப - அந்தணர்கள் அவ்வருளிப்பாட்டினைச் சிரமேற்றாங்கி வணங்கி மனமகிழ்ச்சியோடு சிறந்தார்களாக; தாமும்.......போந்து - பிள்ளையார் தாமும் தெய்வத் திருத்தோணியில் எழுந்தருளிய பெருமானைச் சென்று பணிந்து உண்மையுடைய இசையுடன் கூடிய பதிகங்களினாற்றுதித்து அவரது வாசனை பொருந்திய மலர்போன்ற பாதங்களை மனதிலே வைத்து மீண்டு புறம்பே எழுந்தருளி; பத்தருடன்........நாளில் - அடியார்களுடன் இனிதே அமரும் தன்மை கூடும்படி இறைவரது திருவடிகளைப் பணிந்து போற்றிப் பயின்றிருந்த நாளில், |
267 |
2166. (இ-ள்.) பந்தணை......அமுதுண்ட - பந்தினைப் பயின்ற மெல்லிய திருவிரல்களையுடைய உமாதேவியாரும் சிவபெருமானும் பாய்விடையின்மேல் எழுந்தருளி வெளிப்பட்டு வந்து பொற்கிண்ணத்தில் அளித்தருளிய எல்லையில்லாத ஞானப்பா லமுதினை உண்டருளிய; செந்தமிழ்.......இறைஞ்சுதற்காக - செந்தமிழ்த் தலைவராகிய திருஞானசம்பந்த நாயனாரது திறங்களைக் கேட்டு அவரைக் கும்பிடுவதற்காக; அந்தணர்......நாவுக்கரசர் - அந்தணர்கள் சிறக்க இருக்கும் சீகாழிப் பதியில் திருநாவுக்கரசுநாயனார் - அந்தணர்கள் சிறக்க இருக்கும் சீகாழிப் பதியில் திருநாவுக்கரசு நாயனார் அணைந்தருளினர். |
268 |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
2165. (வி-ரை.) அத்தகைமை - செந்தழலோம்பும் வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் திருவைந்தெழுத்தே யாமென்னும் தன்மை. |
அருள் தலைமேற் கொண்டு - அருள் - அருளிப்பாடு; தலைமேற் கொள்ளுதல் - மிக உயர்ந்த பொருளாகக் கொண்டாடுதல். |
தாமும் - ஆளுடைய பிள்ளையாரும்; அருளை அவர்கள் தலைமேற்கொண்டது போலத் தாமும் தோணி யமர்ந்தார்தாள் தலைமேற் கொண்டார் என்று உம்மை இறந்தது தழுவியது. |
பதிகங்கள் - இவை இன்னவென்பது துணியக்கூடவில்லை. "திருப்பதிகங்கள் பலவும்" (2161) என்ற விடத்துரைத்தவை பார்க்க. |
தாள் மனங் கொண்டு மீண்டு - இறைவரைப்போற்றி மீள்வார் அவரது திருத்தாள்களை எண்ணிக்கொண்டவாறே புறம்போந்தனர். "காளத்தி எந்தையா |