|
ரிணையடி யென்மனத் துள்ளவே" "ஆரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே" முதலியவற்றின் கருத்து. |
பத்தருடன் இனிதமரும் பண்புகூடத் தாள் ஏத்திப் பயிலும் - அடியாரோடினிதிருக்கும் பேறு சிவனருளாற் பெறப்படுவது. கூட - அதனைக் கூடுதற் பொருட்டு. கூட - கூடியதனால் என்றலுமொன்று. அடுத்துத் திருநாவுக்கரசரது கூட்டம் நிகழவுள்ளமை திருவுள்ளக் குறிப்பு. |
267 |
2166. (வி-ரை.) பந்தணை மெல்விரலாள் - பெரியநாயகி யம்மையார். "பந்துசேர் விரலாள் பங்க" (திருவா). (பந்தாடுதலை மகளிர்களிடை நின்றும் ஆடவர் இந்நாளிற் பெரிதும் கைக்கொண்டு தந்நிலை நீங்கினர்.) இது மகளிரின் பொது வியல்பு குறித்ததன்றி உமையம்மையார் பந்தாடுகின்றார் என்பதன்று. "மனைகடொறும் இறைவனது தன்மை பாடிக், கருந்தடங்கண் ணார்கழல் பந் த ம்மானைப் பாட்டயருங் கழுமலமே" என்ற திருவாக்கு இதன் தன்மையை இனிது விளக்குகின்றது. புவனங்களாகிய அம்மை தன்னிடம் நின்று வெளியே விட்டு அவை மீண்டும் தன்பால் அணையும்படி நிற்கின்றார் என்ற உட்குறிப்பும் காண்க. அணை என்ற குறிப்புமது. |
திறம் கேட்டு - திறம் - நற்செய்தி. "பந்தணை.....ஞானசம்பந்தர்" என்றபகுதி; இதுவே அரசுகள் கேட்ட திறமாவதென்பார், ஞானசம்பந்தர் என்றதனோடு உடம்பொடு புணர்த்தி ஓதினார். 1442 - 1443 பார்க்க. ஆண்டும் "அமுது செய்த பிள்ளையார் திருவார்த்தை" என்றும், "பெருந்தகை சீர்" என்றும் கூறியவை காண்க. கேட்டவர் ஆண்ட அரசுகளாதலின் ஆண்டு அதனை விரித்து இங்குச் சுருக்கிக் கூறிய நயமும் கண்டுகொள்க. |
வரம்பில் ஞானத்தமுது - வரம்பில் ஞானம் - எல்லாவற்றையும் அடக்கித் தான் மேம்பட்டு நிற்றலின் வரம்பில் ஞானம் எனப்பட்டது. ஞானத்தைக் குழைத்த அமுது. |
திறம் - பெருமை - வன்மை - முதலிய எல்லாம். "திறங்கொண்ட வடியார்" (தேவா). |
இறைஞ்சுதற்காக அணைந்தனர் - "கேட்டலுமே யதிசயமாங் காதல்கூர வாழியவர் மலர்க்கழல்கள் வணங்குதற்குமனத்தெழுந்த விருப்புவாய்ப்ப" (1443). இறைஞ்சுதற் பொருட்டே அரசுகள் அணைந்தனர் என்க. |
நாவுக்கரையர் ஆதலின் செந்தமிழின் வரும் ஞானத்தமுதத்தை விரும்பி வந்தனர் என்றதும் குறிப்பு. |
268 |
அரசும் பிள்ளையாரும் சந்திப்பு - I |
|
2167.வாக்கின் பெருவிறன் மன்னர் வந்தணைந் தா"ரெனக் கேட்டுப் |
பூக்கமழ் வாசத் தடஞ்சூழ் புகலிப் பெருந்தகை யாரும் |
"ஆக்கிய நல்வினைப் பேறெ"ன் றன்பர் குழாத்தொடு மெய்தி |
யேற்கும்பெருவிருப்போடுமெதிர்கொளவெய்தும்பொழுதில், |
269 |
2168.சிந்தை யிடையறா வன்புந், திருமேனி தன்னி லசைவுங், |
கந்தை மிகையாங் கருத்துங், கையுழ வாரப் படையும் |
வந்திழி கண்ணீர் மழையும், வடிவிற் பொலிதிரு நீறும் |
அந்தமி லாத்திரு வேடத் தரசு மெதிர்வந் தணைய, |
270 |