பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்335

பிரமபுரம்
திருச்சிற்றம்பலம்                திருச்சக்கரமாற்றுபண் - காந்தாரம்
விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம் புகலிவெங் குருமேற் சோலை
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்வண் புறவ மண்மேற்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் கொச்சைகழு மலமென் றின்ன
விளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் பகையெறிவித் திறைவனூரே.
 
அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய் தோணிபுர மணிநீர்ப் பொய்கை
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனுர் புகழ்க்காழி சண்பை தொல்லூர்
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம் வேணுபுர மயனூர்மேவிச்
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் றான்சொன்ன தமிழ்தரிப்போர் தவஞ் செய்தோரே.
திருச்சிற்றம்பலம்
     பதிகக் குறிப்பு :- இது சீகாழியிலருளியது. சக்கர வடிவாக அடைத்துச் சுழன்று வருவதுபோலச் சீகாழியின் பன்னிரண்டு பெயர்களும் மாறிச் சுழன்று வரப் பாடியருளிய சித்திரகவி; இதுபோன்று "பிரமனூர்" என்று தொடங்கு மற்றொரு பதிகம் உண்டு; அது மதுரையிற் பின்னர்க் கூன்பாண்டியன் அவைக்களத்தே அருளுவது; (புரா - 754 - பார்க்க); அது "நாம் கருதும் ஊரே" என்ற குறிப்புடையதாய், "உமது பதி யாது?" என்று அரசன் கேட்ட வினாவுக்கு விடையாக அமைந்தது. இஃது இப் பன்னிரண்டு பேர் படைத்தது இறைவனூர் கன்று போற்றிய குறிப்புடையது.
     பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) களங்கம் இல்ஊர் - ஆலாவமலக் குற்றத்தை இல்லையாகச் செய்யும் ஊர் கொச்சைவயம் என்க. இளங்குமரன் - முருகப்பெருமான். பகை - சூரன்; எறிவித்த இறைவன் - என்க. பெயரெச்சத் தகரம் விகாரத்தாற்றொக்கது.-(4) பூமகன் - பிரமன்;-(5) தரைத் தேவர் - பூசுரர், அந்தணர்; உணர்ந்த அயனூர் - என்க;-(8) மோடி - காளி; சிலையன்; வில்லுடையவன்; அருளி - அருள்பவன்; பெயர்; - (10) மேல் - மேலோர் - மெய்ம்மைநூல் - வேதம்;-(12) சக்கரம் - பதிக அமைதியின் பெயர்; தரிப்போர் - மனங்கொள்வோர்.
     குறிப்பு :- "ஆதிவிகற்பங்கள்" (2175) என்றதனால் ஈண்டுப் பல்பெயர்ப் பத்து என்ற தக்கேசி "எரியார்மழு" என்னும் பதிகமும், "பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர்" என்னும் - காந்தாரம் - கோமுத்திரிப் பதிகமும் இவை முதலாயின பிறவும் வைத்துக் கருதப்படும்.
ஐந்தாவது தலயாத்திரை
2177.அங்க ணமர்கின்ற நாளி "லருந்தமிழ் நாடெத்தி னுள்ளுந்
திங்கட் சடையண்ண லார்தந் திருப்பதி யாவையுங் கும்பிட்
டெங்குந் தமிழ்மாலை பாடி யேத்தியிங் கெய்துவ"னென்று
தங்குலத் தாதையரோடுந் தவமுனி வர்க்கருள் செய்தார்.
279
     (இ-ள்.) அங்கண்..............நாளில் - அத்தலத்தில் விரும்பி எழுந்தருளியிருக்கும் நாள்களில்; "அருந்தமிழ்நாடு......எய்துவன்" என்று - அரிய தமிழ்நாடுவெற்றினுள்ளும் திங்களைச் சூடிய சடையையுடைய பெருமான் எழுந்தருளியுள்ள