வெறுத்துப் பொய்க் காதலரை விரும்பித் துன்புற்ற கொடியன் ஆதலின் 'பாவி யொருவனை' என்றான். உறுவை ஐ விகுதிபெற்ற முன்னிலை ஒருமை வினைமுற்று. அடலி - காடு. 2. தான் பகல் முழுதும் வழி நடந்து அலைந்தும் அடவியைக் கடத்தற்கு விழ காணாமையால், 'வளரும் அடலி' என்றார். ஒருவன் தன் நிழலைக் குறிக்காமல் அளக்கப்புகின் அளக்குந்தோறும் அது நீளுமாதலின், 'தன் நிழலை அளக்குந் தன்மையென' உவமை கூறினார். இதில் அஞ்ஞானத்திற் சிக்குண்டு கடப்பதில்லை;உடல் ஒழிந்து முக்தி யடையும் வழியுளதேல் அதனைக் காட்டி யருள்வாய் எனப் போக்குரையும் காண்க. அவ்வுரைக் கேற்ப மோனைத் தொடை கருதாது 'மாறும்' எனப் பிரித்துக் கொள்க. ஆரிருள் - அருமை யிருள், பண்புத் தொகை;கடத்தற்கரிய இருள் என்றும் பொருள் கொள்ளலாம். வரை - இடம், எல்லை. ஆர்- நிறைந்த. வீடு - விடுவது வீடு, முதனிலை திரிந்த தொழிலாகு பெயர். பந்தம்விட்ட இடம் முத்தி;களைப்பு விட்ட இடம் வீடு. 3. இச் செய்யுளில், உலகப் பற்றுடையார் இக்ககனமாகிய வெளியை அணையார் என்றும், இதிற்சென்று உறையின் அறியாமையில்லை என்றும், இந்த அறிவு வெளியே என் வீடென்றும், அகப்பற்றுப் புறப்பற்று ஒழிந்த பெரியோர்க்குப் பந்தம் அடைதல் இல்லையென்றும் உள்ளுறைப் பொருள்தோன்றுதல் காண்க. சிந்தையற - மனத்திற் பொருந்தும் அகப்பற்றுப் புறப்பற்றுக்கெட. இக்கருத்து, "சினமிறக்கக் கற்றாலும் சித்தி யெல்லாம் பெற்றாலும் மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்ற தாயுமானவர் வாக்கினுங் காண்க. ககனம் - காடு. 4. காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் ஒழித்துச் செம்பொருள் காண்பதாகிய அறிவுடையராதலின், 'அறங்கிடந்த சிந்தையர்' என்றார். பிறப்புக்கு ஏதுவாகிய ஈடணாத்திரயங்களை யொழித்தவர் என்பார், 'ஆசை யெலாம் துறந்த அதிவீரர்' என்றார். பணி - பாம்பு. பணிப்பாய் என்றால் அது திருமால் பள்ளிக்கொள்ளுகிற ஆதிசேடனாகிய பாயைக் குறிக்கும். இதில் அவர் பணிப்பாயும் பூவணையும் உன்னார் என்றமையால் ஆதிசேடனாகிய திருமால் பள்ளிகொள்ளுகிற இடத்தையும், அயன் தங்கியிருக்கிற தாமரை மலரையும் விரும்பாது வீட்டின்பம் (முத்தி) ஒன்றையே விழைகுவர் என்று உள்ளுறையாகப் பொருள் கொள்ளக் கிடத்தல் காண்க. 5. ஆகும் என்பது ஆம் என நின்றது;போகும் - போம் என்பது போல. இதனை, "முதற்றேல், உயிருமுயிர் மெய்யு மேகலு முளவே" (நன்-சூ-ஙசக) என்பதனாலறிக. சலிப்பு - களைப்பு. விடியும் - நீங்கும். 6. அம்முனிவனது வாய்ச்சொற்கள் அன்பொடு கலந்து வஞ்சனையில்லாதனவாய்க் கேட்டார்க்கு இன்பம் பயத்தலின், 'என்றுரைத்த இனிய மொழி யிரு செவியுங் குளிர' என்றார். இனிய - குறிப்புப் பெயரெச்சம்;இனிமை - பகுதி, அ- குறிப்புப் பெயரெச்ச விகுதி. இரு செவியும் என்புழி உம்மை முற்றுப் பொருளது. பழநினைவாவது சிவகாமி என்னும் ஆண்மகன் தன் மாமன் மகனொடு இளமையில் அவன் நிழல் போற் பிரியாமற் கூடியிருந்த தன்மையாம். வணங்கா - வணங்கி;செய்யா என்னும் வாய்பாட்டு இறந்த
|