பெயருங்கள், புறப்படுங்கள். இக் கலித்தாழிசை நான்க அடிகளால் ஒரு பொருண்மேல் மூன்று அடுக்கி வந்து ஈற்றடி அறுசீராய் மிக்கு ஏனையடிகள் நாற்சீராய் நிற்கப்பெற்றது. கலித்தாழிசை. [க. சின்னம் எமன் அதிசயிக்கும் எனக் கருதிச் செருக்கொழிமின். அங்ஙனமன்றித் திரும்புவது சொற்புத்தி, எங்கள் வஞ்சியரசன் வெல்வான் என வெண்ணிச் செருக்குவீராயின், என்பது அடிமடக்கின் பொருள். 2. விஜயலட்சுமி வீரர்புயமே தனது குடியிருப்பாக உடையாள். ஆதலால் ஓடுமின். விடம்போல் உயிருண்ணும் இவ் வீரர் வாளாயுதத்திற் கெதிரே ஓடாது நிற்பீராயின்;என்பது பொருள். 3. தம்மனையைக் காக்க உருவிய வாளுக்குப் பின்னிடும்படியான உறையில்லை, அதாவது மத்தியில் சமாதானப் படுகை யில்லை. இதனைக்கருதாது போருக்கு வந்த பின்னர் திரும்புதல் முறையன்றென் றெண்ணி நிற்பீராயின்;என்பது கருத்து.] [இக் களத்தில் நாற்படை வருணனையும் நாட்டபிமான விளக்கமும் வீரரசமும் வந்தமை காண்க.] நான்காம் அங்கம் இரண்டாம் களம் 12. பஞ்சாய்ப் பறத்துவன் - பஞ்சைப்போற் பறக்கச் செய்வேன். 15. ஊட்டுவன் குருதி - இரத்தத்தைக் குடிக்கச் செய்வேன். 20. [சடையன் - குடிலனுடைய சேவகன் பெயர்.] 23. சபதம் - சூள் மொழி, வஞ்சினம். 27. வகிர்ந்து, பிளந்து என்பதன் முதனிலைகள் வகிர், பிள என்பன. 30. ஒன்றார் - பொருந்தமாட்டார். 42. பிணக்கு - மாறுபாடு, கோபம். 43. குரோதம் - கோபம். 55. சுதேசானுராகத் தொடர்பு - சுதேசாபிமான சம்பந்தம். 75. ஏலும் - பொருந்தும் அல்லது போலும். 97. [ஆம் பொழுது - வேண்டும் பொழுது]வாம்பரி - வாவும்பரி, தாவுகின்ற குதிரை. 105. வாளா - சும்மா, இடைச்சொல். 107. உழை - இடம். 111. வீதல் - கெடுதல், வீ பகுதி. 135. செம்மல் - அரசன். [இக்களத்தில் தரும யுத்தத்தின் நீதியும், படைக்குள் குழப்பம் பிறக்க அரசனுக்கபாயம் நேர்ந்தவழி நாராயணன் காக்கச்சென்ற கதையும் குறிப்பிக்கப்படுகின்றன.] நான்காம் அங்கம் மூன்றாம் களம் 15. சாகசம் - துணிவுச் செயல். 30. இரிந்து - பின்வாங்கி. 35. கார்முகம் - வில். கடிவாள் - கூரிய வாளாயுதம். 54. அஞர் - துன்பம். 75. "செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம், அந்தரஞ்சேர் செங்கதிரோற் கல்லா லல
|