பக்கம் எண் :

மனோன்மணீயம்
212

யெறிந்த திருவிளையாடலைக் குறிப்பிக்கின்றது.]

70. புரந்தரன்கைப்படாப் பொருப்புகள் - இந்திரன் சிறகரியும் வச்சிராயுதத்துக்குத் தப்பி மறைந்த மைநாகபருவதம் போன்ற மலைகள்.

78. நாற்படை - நரி, பரி, தேர், காலாள்;சதுரங்கம்.

88. கொடுந் தொழில் - கொடுமையான செயல், கோடுந் தொழில் என்பதன் குறுக்கமாக்கின் வளைக்குஞ் செயல்.

91. [பாண்டி - பாண்டிநாடாகிய மாதா.]

100. அன்னியன்கைப்படா நீர் - தாம்பிரபன்னி நீர். திருநெல்வேலி ஜில்லாவிலேயே பாய்ந்து முடிதலால் என்க.

101. சோரி - இரத்த மழை.

102. பொன்றிடும் அளவும் - இறக்கும் வரையும்.

106. விந்தம் அடக்கினேன் - அகத்தியன். விந்தமடக்கிய செய்தி அவர் தம் வயத்தன்மையைக் குறிப்பதாம். தந்த நற்றமிழ் மொழி - அவரால் முதலிலக்கணமாகிய அகத்திய இலக்கண நூல் ஏற்பட, அதனால் செம்மையாய்ப் போற்றப்படலான தமிழ்மொழியும் அடுத்த மொழிகளினுதவி யில்லாமலே தனித்தியங்கும் ஆற்றலுடையது என்பதைக் குறிக்கநிற்பது. தந்த என்ற சொற்பொருள் 'அழற்புரை நிறக் கடவுள் தந்த தமிழ்' என்ற கம்பர் வாக்கானும், 'அகத்தியன் பயந்த செஞ்சொல்' என்ற வில்லிபுத்தூரர் வாக்கானும் அறியப்படும்.

108. கிழமையும் - உரிமையும்.

108-117. தமிழ்நாட்டு மக்கள் சிறு பருவத்தினராய்த் தொட்டிலில் நித்திரை புரியுங்காலத்து அவர்கட்கு நல்ல நித்திரை வரவேண்டித் தாய்மார்கள் தாலாட்டிப் பாராட்டியது தமிழ் என்றபடி. அத்தகைய தமிழ்மொழியாளர் இப்பொழுது வீரமும் ஆண்மையும் அற்றோம் என்று கூறுதல் இழிவாம் என்பது.

119. சிறுகால் - இளங்காற்று, மென்மையாக வீசும் தென்றற்காற்று.

122. நாட்டபிமானம் - தேசாபிமானம். நடைப்பிணம் - நடையை மட்டும் கொண்டு மற்றவற்றில் பிணம் போன்றவர்.

124. திருவனையார்கள் - இலக்குமியை யொத்த மனைவிமார்கள்.

132. அரி - சிங்கம்.

136. செந்தழல் - ஓமத்தீ.

140. இந்தனம் - விறகு.

144. திருந்தலீர் - திருந்தலர் என்பதன் விளி. திருந்தலர் - மனம் திருந்தப் பெறாதவர், பகைவர்.

148. காயம் - வடு. மாறாத்தழும்பு.

151. "விழுப்புண்படாத நாளெல்லாம் வழுக்கினுள், வைக்குந் தன்னாளை யெடுத்து" குறள் அதி. 78 செ. 6 என்று குறட் கருத்து.

154. அனந்தம் - எல்லையற்ற.

158. கோட்டகது - கொள்ளத்தக்கது, கொள் என்னும் பகுதி கோள் எனத் திரிந்து தொழிற்பெயராயிற்று.

163. கணம் கணம் - கணந்தோறும்;அடுக்கு தொறுப் பொருட்டு.

165. உதும்பரதரு - அத்தி மரம்.

166. இறும் மசகம் - இறக்கம் கொசுகு.

172. அழுக்காறு - பொறாமை, அழுக்கறு பகுதி.

183. சேமமாய் - சுகமாய் அல்லது காவலாய்.

குறளடி வஞ்சிப்பா :-தமர் - சுற்றத்தவர். நந்தா - கெடாமல். நிந்தாநெறி - நிந்தித்தலாகிய வழி. தந்தாவளி சிந்தாவிழ - பல்வரிசை உதிர்ந்து கீழ் விழும்படி, பெயருமின் -