டே தெளியலாம் என்றபடி, கரதல + ஆமலகம்; தீர்க்கசந்தி. 155. விண்டிடா வண்ணம் லீக்கியபாசம் - பிரிந்திராவிதம் கட்டிய கயிறு. 156. ஆகருஷணம் - இழுத்து நிற்கும் சக்தி. 160. குயிற்றிய - செய்த, குயிற்று பகுதி. 168. அக்கரம் பயில்வது - அட்சரம் பழகல், எழுதப்படிப்பது. 176. உள்ளுவர் - நினைப்பர், உள் - பகுதி. 179-182. [பாரிஜாதம் முல்லை முதலிய பூக்கள் வெண்மை நிறமும் சுகந்தமும் உடையனவாயிருப்பதற்கு அவை இராக்காலம் அலர்தலே காரணம் என்பது ஜீவ சாத்திரிகளின் கொள்கை.] 184. உசிதம் - மேன்மை. நிசி - இரவு. 196. உறுகண் - துன்பம், இடுக்கண். ஏது - காரணம். 208. அல்லல் - துன்பம். 222. சாத்தியம் - முடியக்கூடியது. 227. [பந்தம் - சம்பந்தம்.] 236. எய்ப்பினில் வைப்பு - இளைத்தகாலத்து உதவும் பொருள். 239. சமுசயம் - ஐயம். 250. அரற்றி - வாய்விட்டுச் சொல்லி, அழுது. 259. முகமன் - நயவுரை, முகத்துதி. 277. [நீர் பிரபஞ்சத்தை அருள்வடிவாகப் பார்க்கும் பார்வையும் முடிந்த நிலமன்று. ஆயினும் உமக்குப் பந்த நிவிர்த்தி சமீபமாய்விட்டது. என்பது இவ்வரியின் குறிப்புப் பொருள்.] 281. சமயிகள் - சமயத்தைச் சார்ந்தவர்கள், மதத்தோர். கலித்துறை:-ஆபதம் - ஆபத்து, கற்படை - சுருங்கை. மாற்றம் - சொல். [முடிவில் வரும் கலித்துறை சுந்தரர் சமைத்த சுரங்கத்தைத் தத்துவோபதேசமாக உருவகப் படுத்தி அனுபூதியாலன்றி உபதேசார்த்தம் வெளிப்படாதென்று வற்புறுத்துகிறது.] -------- நான்காம் அங்கம் முதற் களம் 8. மடு - தடாகம், குளம். 11. ஒன்றிய - பொருந்திய. 20. கடம்பாடு - கடன்படுதல், கடமை. 31-32. "கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து" - குறள் அதி. 49 செ. 10 என்ற குறட்கருத்து. 33. சம்பவம் - காரணம், சங்கதி - வரலாறு. 46. இதக்கேடு - நன்மைக்குக் கெடுதி. 50. பாற்றினம் - பருந்துக் கூட்டங்கள்: 51. பணைத்து - பருத்து. 61. கலினம் - கடிவாளம். 66. மும்மதம் - கன்னமதம், கபோலமதம், கோசமதம் என்ற மூன்று மதம். 68. கறுவி - கோபித்து. 69. வெந்நிட்டு - முதுகுகாட்டி, புறங்கொடுத்து. [இவ்வரி உக்கிர குமார பாண்டியன் இந்திரன் முடிமேல் வளை
|