83. போதம் - அறிவு. 87. துவக்கு இந்திரியம் - தொட்டறியும் உணர்வு, பரிசம். 89. சேய்த்து - தூரத்திலுள்ளது, சேய்மை - பகுதி. 95. வடக்குநோக்கி - திசைகாட்டும் யந்திரம். இதில் முள் எப்பொழுதும் வடபக்கத்தையே நோக்கி நிற்கும் (Mariner's compass). 104. ஏய்ப்ப - போல. 115. அனுமான ஆதியால் - அனுமானம் முதலிய அளவுகளால். 121. சீதம் - குளிர்ச்சி. 133. வெஞ்சரம் - கொடிய அம்பு. 134. நிற்கலை - நிற்கவில்லை. [இக்களத்தில் சந்தியாவருணனையும் மனோன்மணியின் சோக நிலையும் பத்தியின் சுபாவமும் உபயார்த்தமுடைய சிவகாமிசரிதமும் சொல்லப்பட்டமை காண்க.] மூன்றாம் அங்கம் நான்காம் களம். 1. மயக்கம் - கலக்கம் ;மயங்கு பகுதி. 2. வேதாந்தம் - வேத + அந்தம் - மறை முடிவு. 3. இமையாது - இமை யென்னும் வினையடியாகப் பிறந்த எதிர்மறை வினையெச்சம். 4. பரிதபித்திருந்தீர் - வருந்தியிருந்தீர்;பரிதாபம், பெயர். 13. விரூபம் - வி + ரூபம் - ரூபமற்றது. அவலட்சண வடிவம். 15. அல் - இருள். 16. பேழ்வாய் - பெரிய வாய். 21. இசித்துக் கறிக்க - இழுத்துக் கடிக்க. 28. பஞ்சா சத்கோடி - ஐம்பது கோடி. 36. அலகிலை - அளவில்லாதது. 38. உந்தியந் தடாகம் - கொப்பூழாகிய குளம். முளரி - தாமரை, முள்ளோடு கூடிய தண்டையுடையது. 41. நான்முகச் சிலந்தி - நான்கு முகங்களையுடைய பிரமனாகிய சிலந்திப்பூச்சி. நாற்றிய - தொங்கவிட்ட, நால் தன்வினைப்பகுதி. இதனுடன் று என்ற பிறவினை விகுதி சேர்ந்து நாற்று என்ற பிறவினைப் பகுதியாகும். 45. பேய்த்தேர் - கானல் நீர். 49. மகோததி - மகா + உத்தி - (குணசந்தி) பெருங்கடல். 50. புற்புதம் - நீர்க்குமிழ். 52. தாங்குநர் - தாங்குபவர். 54. இந்திரஜாலம் இவ் எந்திர விசேடம் - [மாயாகாரியமாகிய பிரபஞ்சம்] 56. திரிகை - திரிக்கும் இயந்திரம். 64. [ஆர்க்கும் - வருந்தி இரைகின்ற.] 66. மீக்கொளும் - மேலாகும். 71. பிரத்தியக் பிரபோ தோதயம் - உன் முகமான மெய்ஞ்ஞானத் தோற்றம். 73. அகண்ட - எல்லையற்ற, சித் - அறிவு. 80. [சுதமாம் - சுவத சித்தமாம் - தானே பலிக்கின்ற] 88. மோனம் - ஞானவரம்பு. 104. சினகரம் - கோவில். 116. அகம் உடைந்தும் - மனம் வருந்தியும். 123. விடும்பரிசு - விடுந்தன்மை. 138. சங்கேதம் - குறியீடு. 144. கரதலாமலகம் - அங்கை நெல்லிக்கனி, நெல்லிக்கனியின் உட்புறம்போன்ற தன்மையே அதன் வெளிப்புறத்தும் காணப்பெறும். இதன் உண்மையைக் கையிற்கொண்
|