பக்கம் எண் :

மனோன்மணீயம்
209

செல்வநிலையாமை, கயவரைச் சேராமை முதலியன. அறிவுளதோ - ஓகாரம் வினாவொடு ஐயம் என்க. புனிதர் - தூயர். போதம் - அறிவு.

45. வந்திலரோ என்புழி ஓகாரம் பிரிந்து ஏன் என்னும் வினாவுடன் கூட்டப்பட்டது. ஏவன் என்பதன் மரூஉ. கூன் என்றாயது. ஓகாரம் வினாவுடன் ஐயம், நலம் - நன்மை. எதிர் - நேர்.

46. தன்னைக் காதலித்தவரெல்லாம் பொய்க் காதலுடையவராதலானும் இவர் ஒருவரே மெய்க் காதலுடையவ ராதலானும் 'உயிர்த்துணைவர்' என்றார். பால் - இடம், சாயை - சாயல்.

47. இவ் வழலே கதியென்றது இவ் வழலில் விழுந்து இறத்தலை. மூதுருவம் - முதுமை + உருவம்;ஈறு போதல் என்றதனால் மை கெட்டு, ஆதி நீடல் என்றதனால் மூது என்றாய் 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' - என்றதனால் மூதுருவம் என்றாயது. குளறி - தடுமாறி.

48. முனிவன் சிவகாமியின் மாமன் பிள்ளையாதலால், 'உனது சிதம்பனே' என்றான். அன்பின் ஆராமையால் ஒருவர்க்கொருவர் முற்பட்டுத் தழுவிக் கொண்டமையால், 'எவர்தாம் முன் அணைந்தனர் என்றிதுகாறும் அறியோம்' என்றார். அறியோம் என்னும் பயனிலைக்கு எழுவாய் வருவிக்கப்பட்டது. அறியோம் என்றது வாணி கூற்று. நான்கு வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ப.

49. உமாதேவியார் பர்வதராசன் புத்திரியாதலால் 'பார்வதி' எனப் பட்டாள். பாரதி - சரசுவதி. பார்க்கவி என்பது உமாதேவிக்குப் பெயராயினும் 'கஞ்சப்பார்க்கவி' என்றமையால், இலக்குமியை யுணர்த்தியது'. நாயகனிடத்து அன்பிற்சிறந்த அருந்ததியும் பெண்களுள் இவ்வளவு அன்புடையாளை இதுகாறும் காணாது கண்டமையால் 'அருந்ததியும் அம்ம இஃதருங்கதியென்றஞ்ச' என்றார். இவ்விருவருடைய அன்பின் நிலைமையைக் கண்டு உலகமும் அன்புடையராயினமையின், 'ஆர்வம் உலகார்க' என்றார். உலகு - ஆகுபெயர். ஆர்க வியங்கோள் வினைமுற்று.

50. ஆழி - கடல், ஆழ்தலையுடையது;இ - வினைமுதற்பொருள் விகுதி. புடை - பக்கம். அறம் - தருமம். அறத்தை நீர்த்துறையாக உருவகித்தமைக் கேற்ப அன்பை வெள்ளமாக உருவகித்தனர். இஃது இயைபு உருவகம். பந்தனைகள் - கட்டுகள்;ஈண்டு மனத்துன்பங்களை யுணர்த்தின. மனத்துன்பங்களாவன வாணியின் தகப்பனாகிய சகடன் தன் மகளைத் தன் காதலனாகும் நடராஜனுக்கு வாழ்க்கைப்படாமல் குடிலன் புத்திரனாகிய பலதேவனுக்கு வாழ்க்கைப்பட வேண்டுமென்று வற்புறுத்த அதற்கு அவள் உடன்படாமையாலுண்டான வருத்தங்கள் என்க. வாணி முடிவில் தான் விரும்பிய நடராஜனையே மணக்கின்றமையால், "பரிந்து அருள் சுரந்தமை நிரந்தரமும் வாழ்க" என்றாள். நிரந்தரம் - எப்பொழுதும்.

மூன்றாம் அங்கம் மூன்றாம் களம்.

தொடர்ச்சி.

40. படர்ந்து - சென்று.

50. எதிர்ச்சையா - நினைத்திராதபடி, திடீரென்று.

58. தீம்புனல் - இனிய நீர்.

61. காவி - குவளை மலர்.

64. முகந்திலன் - மோந்திலன், வாசனை யறிந்தேனில்லை.

66. மான - போல.

67. மாடு - பக்கம், ஏழனுருபு.