பக்கம் எண் :

மனோன்மணீயம்
217

209. நலிதல் - வருந்துதல்.

234. செவ்வே வடக்கு - நேர் வடக்கு.

முறி - அறை, முறிக்கப்பட்டது. அதாவது அறுக்கப்பட்டது.

230-235.[இக் கேள்விகளால் குடிலன் சுருங்கை இருக்க வேண்டுமிடம் இன்னதென்று ஊகித்து நிச்சயித்துக் கொண்டு தான் அதனை முன்னமே கண்டுணர்ந்தவன் போலப் பாவனை காட்டுகிறான்.]

242. புந்தி - புத்தி.

245. பாங்கோ - முறையோ, நலமோ.

[பண்டே - கோட்டை காண அழைத்த நாளில்.]

255. தேன் ஆர் தெரியல் சூடுமுன் - தேன் வண்டுகள் மொய்க்கின்ற மணமாலை சூடுவதற்கு முன். அதாவது கலியாணமாகுமுன், தேன் - மதுவுமாம்.

256. அந்நியர்பால் - அயலாரிடம்.

268. சதி - வஞ்சனை.

271. கருநா - விடநாக்கு, கருநாவுடையவர் சொல்லும் தீ மொழி பலிக்கும்.

277. குழாம் - கூட்டம்.

280. காண்டும் - காண்போம்.

285. அல் - இரவு.

287. நுவல்தரு - சொல்லப்படும்.

293. [இதுபோல் - இச்சேரனது துர்க்குணம்போல்.]

303. [பாண்டம் - மட்கலம், கடையிற் கொண்ட பொருள்களைக் கொடுத்து மாறிக்கொள்ளலாம். அப்படியன்றே விவாகத்தில் கொள்ளல். இது ஒரு கிராமியப் பழமொழி.]

306. உசாவி - விசாரித்து கேட்டு ஆராய்ந்து.

324. விருத்தமாய் - வீணாய்.

325. கலுழுநள் - அழுகின்றாள், கலுழ் பகுதி.

337. [அதுவும் தன்னயம் கருதல் மாத்திரமன்றி அங்ஙனம் கருதுவதாகப் பிறர்க்குத் தோற்றத்தக்கதும்.]

334. மிகை - மிகுதியானது.

351. ஒவா - நீங்காத.

353. [மீட்டுதும் - மனோன்மணியை.]

366. ஆய்வு - ஆராய்ச்சி.

364. [குறியே இதனை 366 ல் உள்ள ஆய்விடும் என்பதோடு சேர்க்க.]

369. [எண்ணினன் - முனிவன் எழுவாய்.]

370. ஊகம் - ஊகிக்கும் கருத்து.

380. [துணிந்தன - எழுவாய் படைஞராகிய நாய்கள்.]

382. [எளியன் - நாரணன்.]

கலித்துறை :-
விராகம் - வி+ராகம். ஆசையின்மை, ஆணவம் - அகங்காரம், பெயர்ந்து - நீங்கி.

[இக்களத்தில் அரசர் கடமையும் ஆண்மையும் ஜீவகனது ஏழைமையும் குடிலனுடைய சமயோசித சாமர்த்தியமும் விளங்கலாம். அங்க முடிவில் வரும் கலித்துறை தேகாபிமான பலத்தையும 'ஞானமில் வைராக்கியம் நன்றன்று' என்னும் தத்துவ நூலின் கொள்கையையும் அவ்வங்கத்து நடந்த கதையால் விளக்குகின்றது.]

--------

ஐந்தாம் அங்கம்

முதற்களம்.

2. இருசரம் - இருவழி, ஈரம்பு.

5. கோள் - கொள்கை.

6. ஒருங்கே - ஒருசேர, முற்றும்.

7. [இன்றேல் - இசைகுவது இன்றேல்.]

12. பாண்டில் - வண்டி.