15. [நம்மகன் - பலதேவன்.] 18. கேளொடு கிளைஞர் - அன்போடு தோழர், கேண்மை - நட்பு அன்பு. கிளைஞர் என்பதில் ஞ், பெயரிடை நிலை. 28. வான்காடு - ஆகாயமாகிய காடு. 29. மீன்காள் - நாள்களே, நட்சத்திரங்களே;மின்னுவது. மீன் - காரண இடுகுறிப்பெயர். 28-35. இவ்வரிகளில் சோதிடப் பயிற்சி இகழப்படுகிறது. 36. பாசறை - படைவிடு (camp) 37. பொங்குங்கால் - வீசுகிற காற்று. குறள் வெண்செந்துறை. 1. உள்நினைவு - மனக்கருத்து. 2. அவத்தை - நிலை வேறுபாடுகள். அவை சாக்கிரம், சொப்பனம், கழுத்தி. 3. அலமாக்க - அலைய, அலமா - பகுதி. கரணம் - கருவி. 43. மருள்தரு மதனன் - மயக்கஞ் செய்கின்ற மன்மதன். குறள்வெண் செந்துறை 4. புலன் ஆர - கட்புலன் நுகரும்படி. போதம் - அறிவு. புன்மை - அற்பம். 5. பெத்தமனம் - கட்டுப்பட்ட மனம். பெத்தம் என்பதற்கு எதிர்மொழி முத்தம். கற்பிதம் - உண்டாக்கப்படுவது. 6. தேராது - தெளியாமல், ஊழ் - விதி. [குறள் வெண்செந்துறையில் கடைசியடி யொழித்து மற்றவை ஞான சமாதியில் விளங்கும் பிரமானு பூதிக்கும் புருடோத்தமன் கனாக்கண்ட மனோன்மணியின் காதல் வடிவிற்கும் பொருந்துவது காண்க.] 56. இறுத்த - தங்கிய. 57. கௌவை - துன்பம், சோகம். 69. [இப்புவி - பாண்டி நாடு.] 81. முயக்கம் - சேர்க்கை, முயங்கு - பகுதி. 87. [அறமேயாயினும் - எழுவாய் காதல்.] 101. பொருநர் - போர் வீரர். 102. வயவர் - வீரர். 104. நொந்த சூலினர் - வருந்திய கருவுடைய மகளிர். 105. மள்ளர் - வீரர். 108. செயிர் உற - வலிமையாக. 114. வெறியன் - வெறி பொருந்தியவன். வெறி - மயக்கம். 117. மண்டுஅமர் - நெருங்கிய யுத்தம். 124. உறுதுயர் - பொருந்தும் துன்பம், மிக்க துன்பம், இப்பொருளில் உறு - உரிச்சொல். 126. காதலம் - கையிடம். கௌசலம் - சாமர்த்தியம். 133-135. [பாண்டி நாடு பரம்பரையாக அரசர் ஆண்டுவந்த பூமியாதலினால், நாட்டார் திருப்திக்காக எனக்கு அரசன் என்ற வெறும் பட்டமாத்திரம் நீ தருவையாயின்.] 142. ராகவன் - ராமன், ரகுவம்சத்தில் தோன்றியவன். தத்திதாந்த நாமம். பழம் பகை - பழைய பகைவனான இராவணன். செற்று - அழித்து. 143. விபீஷணன் - இராவணன் இளைய சகோதரன், இராகவனைச் சரணடைந்தவன். 149. கைதவன் - பாண்டியன். 150. உதியன் - சேரன். 152. கைத்தளை - கைவிலங்கு. தளை - தடுப்பது. 154. அணிதே - அண்ணிதே. சமீபத்திலுள்ளது. 164. [உறுதி - பாண்டிக்கு அரசனாக்குவேன் என்ற உறுதிமொழி.] 166. விஜயம் - வெற்றி. 168. நச்சிடில் - விரும்பினால். 169. சித்திரவதை - உறுப்புறுப்பாய் வதைத்தல், வதை - வருந்து.
|